உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிலமோசடி வழக்கில் இருவர் கைது

நிலமோசடி வழக்கில் இருவர் கைது

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே சேவுகம்பட்டியில் நில மோசடி வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை அபிராமபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர், திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி அருகே சேவுகம்பட்டியை சேர்ந்த தனது சகோதரர் சேதுராமனிடம் 54 சென்ட் இடத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்தார். இதே பகுதியை சேர்ந்த லட்சுமணமூர்த்தி(45), அந்த இடத்தை தனக்கு விலைக்கு தருமாறு, பாலமுருகனை கேட்டபோது, மறுத்துவிட்டார். இதையடுத்து கடந்த ஜூலை 5 ல் லட்சுமணமூர்த்தி சிலருடன் வந்து, பாலமுருகனை நிலத்திற்குள் வரக்கூடாது என்றும், நிலத்தை தான் விலைக்கு வாங்கிவிட்டாத கூறி மிரட்டியுள்ளார். பாலமுருகன், நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் சென்று பார்த்த போது, லட்சுமணமூர்த்தியின் மகன் பிரபு கிருஷ்ணா பெயரில் பதிவு செய்யப்பட்டு, அவர் மைனர் என்பதால், தந்தை, லட்சுமணமூர்த்தியை கார்டியனாக போட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து பாலமுருகன், திண்டுக்கல் எஸ்.பி., சந்திரசேகரிடம் புகார் செய்தார். வழக்கை விசாரித்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ரெங்கசாமி மற்றும் லட்சுமணமூர்த்தி ஆகியோரை கைது செய்து திண்டுக்கல் ஜே.எம்., 2 கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ