உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டா வழங்க ரூ.5,000 லஞ்சம்; தஞ்சையில் வி.ஏ.ஓ., உள்பட இருவர் கைது

பட்டா வழங்க ரூ.5,000 லஞ்சம்; தஞ்சையில் வி.ஏ.ஓ., உள்பட இருவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டா வழங்குவதற்காக ரூ.5,000 லஞ்சம் வாங்கிய தோப்புவிடுதி வி.ஏ.ஓ., முருகேசன் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தாலுகா பகுதியை சேர்ந்த அம்மங்குடி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். இவரது நிலம் தோப்புவிடுதி கிராமத்தில் உள்ளது. கூட்டு பட்டாவில் உள்ள நிலத்திற்கு உட்பிரிவு செய்து தனிபட்டா பெற, தோப்புவிடுதி வி.ஏ.ஓ., வான புதுக்கோட்டை மாவட்டம் மட்டங்கால் பகுதியை சேர்ந்த முருகேசன்,32, என்பவரை அணுகியுள்ளார். அப்போது, முருகேசன் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், பணத்தை திருவோணம் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள இ - சேவை மையம் நடத்தி வரும் ஊர்காவல்படையில் பணியாற்றும் சுதா என்பவரிடம் கொடுத்து விட கூறியுள்ளார். இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேசன், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின் படி, ரசாயனம் தடவிய பணத்தை பெற்றுக் கொண்டு நேற்று வேல்முருகன், சுதா நடத்தி வரும் இ- சேவை மையத்திற்கு சென்று, பணத்தை சுதாவிடம் கொடுத்தார். பிறகு, லஞ்ச பணத்தை வி.ஏ.ஓ.,முருகேசனிடம் சுதா வழங்கியுள்ளார். அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், வி.ஏ.ஓ., முருகேசனையும், சுதாவையும் கையும் களவுமாய் பிடித்தனர். பிறகு இருவரையும் திருவோணம் தாசில்தார் அலுவலகத்தில் வைத்து டி.எஸ்.பி., அன்பரசன், இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையிலான போலீசார் சுமார் 3 நேரம் விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

kr
ஜூன் 05, 2025 06:05

Model government suddenly is arresting lots of petty corrupt government workers. Is it to shield the attention from big corruption charges like TASMAC and other model ministries lapses


D Natarajan
ஜூன் 05, 2025 05:25

லஞ்சம் கொடுக்காமல் பட்டா வாங்க முடியாது. கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய நீதிபதி ஜாலியாக ஊர் சுற்றுகிறார் 5000 வாங்கிய அரசு அதிகாரி ஜெயிலில் . ஹா ஹா


தாமரை மலர்கிறது
ஜூன் 04, 2025 23:43

கோட்டாவில் வளர்ந்து ஊழலில் மின்னும் திராவிட விண்மீன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை