பாடப்புத்தகம் விற்பனையில் முறைகேடு செய்த இருவர் டிஸ்மிஸ்
சென்னை:தமிழ்நாடு பாடநுால் கழக விற்பனை கூடங்களில், புத்தகங்கள் விற்றதில் முறைகேடு செய்த இரண்டு அதிகாரிகள், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு பாடநுால் கழகத்தின் சார்பில், அரசு பள்ளிகளுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், தனியார் பள்ளிகளுக்கான புத்தகங்கள், தமிழகத்தில் உள்ள 22 மண்டல அலுவலகங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், மண்டல அலுவலகங்களில் பாடநுால்களின் இருப்பு, விற்பனை குறித்த நேரடி ஆய்வில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அதில், திருவள்ளூர், சென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட நகரங்களில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு உள்ள மண்டல அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதில், மதுரை மண்டல அலுவலகத்தில் கண்காணிப்பாளராக இருந்த தனசெல்வி என்பவரும், துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மண்டல அலுவலகத்தில் கண்காணிப்பாளராக இருந்த அருள்செல்வன் என்பவரும், 70 லட்சம் ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்தது உறுதியானது. இதையடுத்து, அவர்கள் நேற்று டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.