உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பலி; சென்னையில் சோகம்

தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பலி; சென்னையில் சோகம்

சென்னை: பூந்தமல்லி அருகே தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி மோதிய விபத்தில், சாலையில் நடந்து சென்ற பெண் உள்பட 2 பேர் பலியாகினர்.சென்னீர் குப்பம் - ஆவடி சாலையில் குடிநீர் வாரியத்தின் ஒப்பந்த லாரி ஒன்று தாறுமாறாக ஓடியுள்ளது. சாலையில் சென்ற வாகனங்கள் மற்றும் நடந்து சென்றவர்கள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, விபத்தை ஏற்படுத்தி லாரி டிரைவரை பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர். மேலும், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், டிரைவரை கைது செய்து விபத்து குறித்து விசாரித்தனர். அப்போது, டிரைவர் குடிபோதையில் இருந்ததே விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஜூலை 31, 2025 23:21

டிரைவர் தண்ணியில் மிதந்ததால தறிகெட்டு ஓடியது தண்ணீர் லாரி. இறந்தவர் குடும்பம் சோகம். அப்பாவும் அக்காவும் அடுத்த தேர்தலுக்கு ஆயத்தம்.


Ramesh Sargam
ஜூலை 31, 2025 12:54

அப்போது, டிரைவர் குடிபோதையில் இருந்ததே விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். குடிபோதையில்... இந்த விஷயத்தை நம்ம அக்கா கனிமொழிக்கும், நம்ம அப்பா ஸ்டாலின் அவர்களுக்கும் விளக்கி சொல்லவும். பூரண மதுவிலக்கு என்று சொல்லி ஆட்சியை பிடித்தவர்கள் அவர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை