உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.10,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர் கைது

ரூ.10,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவள்ளூர்: விபத்து வழக்கில், லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவரை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார். கடந்த மாதம், 14ம் தேதி தொம்பரம்பேடு பகுதியில் காரில் சென்றார். அப்போது, எதிரே வந்த பைக்கில் கார் மோதியது. இதில், அஜித்குமார் உட்பட மூன்று பேர் காயம் அடைந்தனர்.இது குறித்து விசாரித்த ஊத்துக்கோட்டை எஸ்.எஸ்.ஐ., பாஸ்கர், விபத்து ஏற்படுத்திய காரை திருவள்ளூர் ஆர்.டி.ஓ., அலுவலகம் கொண்டு செல்ல, 10,000 ரூபாய் லஞ்சம் வேண்டுமென கேட்டுள்ளார். இது குறித்து, திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசில், அஜித்குமார் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின்படி, எஸ்.எஸ்.ஐ., பாஸ்கருக்கு லஞ்சம் கொடுக்க, அஜித்குமார் காவல் நிலையம் சென்றார். அப்போது, அவர் அங்கு இல்லை.அவரை மொபைலில் தொடர்பு கொண்ட போது, தான் வெளியே இருப்பதாகவும், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் சுகுமாரிடம் பணத்தை கொடுக்குமாறும், எஸ்.எஸ்.ஐ., பாஸ்கர் கூறியுள்ளார். அதனால், ரசாயனம் தடவிய பணத்தை, சுகுமாரிடம் அஜித்குமார் கொடுத்தார். அப்போது, அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கணேசன் தலைமையிலான போலீசார், சுகுமாரை கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து எஸ்.எஸ்.ஐ., பாஸ்கரும் கைது செய்யப்பட்டார். இருவரும் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Oviya Vijay
அக் 31, 2025 17:48

இட ஒதுக்கீட்டை ஒழித்து, தேசபக்தி உள்ளவர்களை, நியமிக்க வேண்டும்...கடவுள் மீதிருந்த பயமும் இல்லை, மனசாட்சியும் இல்லை...பின்னர் லஞ்சம் வாங்குவது எப்படி நிற்கும்...???


ராஜா
அக் 31, 2025 16:45

First give then take policy போல் காசுக்கு வாங்கிய பதவி மூலம் காசு சம்பாதிக்கும் பதவி தான்


சிந்தனை
அக் 31, 2025 13:51

லட்சத்தில் ஒருவரை தான் திருடர்களை கண்டுபிடிக்க முடிகிறது


ديفيد رافائيل
அக் 31, 2025 10:54

இவனுங்களுக்கு அரசு வேலை ரொம்ப எளிதில் கஷ்டப்படாம கிடைச்சிருக்கும் போல. அதான் இப்படி கேவலமா லஞ்சம் வாங்கி மானங்கெட்ட பிழைப்பு பிழைக்குறாங்க.


Raghavan
அக் 31, 2025 13:49

பணம் கொடுத்து வேலை வாங்கியிருப்பான் போல அதான் லஞ்சம் கொடூத்த பணத்தை லஞ்சம் வாங்கியே சரிக்கட்டுகிறார்கள். தான் மாட்டிக்கொண்டதும் இல்லாமல் அடுத்தவனையும் இப்போது மாட்டிவிட்டான் .


duruvasar
அக் 31, 2025 09:59

டைட்டில் கார்டை "லஞ்சம் நிமிர் நேர்மை தவிர் " என மாற்றுங்கள்.


Thravisham
அக் 31, 2025 09:54

தமிழகம் பெயரை லஞ்சகம் என்று மாத்திடுங்கள்.


HoneyBee
அக் 31, 2025 09:21

கோடிகளில் ஏமாற்றி லஞ்சம் வாங்கியவர்களை என்ன செய்வது... ஏன் என்றால் அவர்கள் அரசியல்வாதிகள்


தியாகு
அக் 31, 2025 08:27

இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே தற்குறி டுமிழர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை வசைபாடி ஏதோ உலகமே நின்றுவிட்டதுபோல பதறுவார்கள். ஆனால் மக்கள் வரி பணம் பத்தாயிரம் கோடிகளை ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் ஆட்டையை போட்டு தங்கள் குடும்பத்திற்கு சொத்து சேர்க்கும் கட்டுமர திருட்டு திமுகவை தொடர்ச்சியாக ஆட்சியில் அமரவைத்து அழகுபார்த்து, திருட்டு திமுகவின் தலைமை குடும்பத்து ஆட்களை, குறுநில மந்திரிகளை, சிறுகுறுநில எம் எல் ஏக்களை, வட்ட செயலர்களை, கவுன்சிலர்களை மாலை போட்டு ஆரத்தி எடுத்து வரவேற்று ஆரத்தி தட்டில் ஏதாவது பிச்சை காசு போடமாட்டார்களா என பல்லிளிக்க ஏங்குவார்கள். டுமிழர்களுக்கென்று ஒரு தனி குணம் உண்டு என்று தங்களை தாங்களே அடிக்கடி புகழ்ந்துகொள்வார்களே அது இதுதானோ? ஹி...ஹி...ஹி... இதை படித்துவிட்டும் தற்குறி டுமிழர்கள் மீண்டும் கட்டுமர திருட்டு திமுகவிற்கு அடுத்த தேர்தலில் ஓட்டு போடுவார்கள். அவர்களின் தனி குணத்தில் இதுவும் அடக்கம். ஹி...ஹி...ஹி...


VENKATASUBRAMANIAN
அக் 31, 2025 08:17

இதுபோல் அனைவரும் செய்ய வேண்டும். ஆனால் ஆயிரம் கொடுக்கும்போது இல்லை. லட்சம் கொடுக்கும் போது செய்ய வேண்டும்


சமீபத்திய செய்தி