ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதிகள் இருவர் பதவி ஏற்பு
சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில், கூடுதல் நீதிபதிகளாக என்.செந்தில்குமார், நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர், கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் நியமிக்கப்பட்டனர். இவர்கள் இருவரையும், நிரந்தர நீதிபதிகளாக நியமிப்பதற்கான பரிந்துரைக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். கடந்த 24ல், அவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, நீதிபதிகள் என்.செந்தில்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர், நேற்று சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்களுக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.