உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓசூர் விமான நிலையத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு

ஓசூர் விமான நிலையத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஓசூரில் விமான நிலையம் அமைக்க, இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.சென்னை, கோவைக்கு அடுத்ததாக, தொழில் வளர்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.எனவே, கிருஷ்ணகிரியில், 2,000 ஏக்கரில், ஓசூர் விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஐந்து இடங்களை தேர்வு செய்து, ஆய்வு செய்யும் பணியை, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடம், 'டிட்கோ' நிறுவனம்,கடந்த ஆண்டு வழங்கியது. அந்த இடங்களில், ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.பின், ஐந்து இடங்களில், இரண்டை தேர்வு செய்து தரும்படி, 'டிட்கோ' வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது, ஓசூர் கிழக்கில் ஒன்று, தெற்கில் ஒன்று என, இரு இடங்களை தேர்வு செய்து டிட்கோவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த இரு இடங்களில் ஒன்றை, தமிழக அரசு தேர்வு செய்யும். அங்கு விமான நிலையம் அமைக்க, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் அனுமதி பெறுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Venkataraman
ஏப் 08, 2025 14:22

ஓசூருக்கு அருகில் பெங்களூரில் ஏற்கனவே ஒரு பெரிய விமான நிலையம் இருப்பதாலும், மற்றொரு புதிய விமான நிலையமும் அதற்கு பக்கத்திலேயே அமைய இருப்பதாலும் ஓசூரில் விமான நிலையம் அமைப்பது லாபகரமாக இருக்காது. ஓசூரிலிருந்து பெங்களூர் விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயில் விட்டாலே போதும்.


Ram Moorthy
ஏப் 08, 2025 14:10

இடமே இதுக்கு மேலே தான் கண்டு பிடிக்கனுமா ரொம்ப சந்தோஷம் கதை உருபட்டார் போலதான்


Ramesh Sargam
ஏப் 08, 2025 11:24

எந்த இடத்தையாவது தேர்வு செய்யுங்கள். ஆனால் ஒன்று, அங்கு நிறுவப்படும் விமான நிலையத்திற்கு என்னுடைய அப்பா கருணாநிதி பெயர்தான் வைக்கணும். ஆமாம், சொல்லிப்புட்டேன்.


Anand
ஏப் 08, 2025 11:03

இரண்டு இடத்தையும் தேர்வு செய்தால் மாடலுக்கு சந்தோஷமாக இருக்கும்...


G Mahalingam
ஏப் 08, 2025 10:20

அங்கு திமுகவினர் நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி குவித்து விட்டு பிறகுதான் மத்திய அரசிடம் அந்த இடத்தை தேர்வு செய்யும் படி சொல்வார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சி


jesu raj
ஏப் 08, 2025 09:50

Useless news since 2 years...


Venugopal, s
ஏப் 08, 2025 08:02

எதிரி கட்சியாக இருந்தபோது பறந்தூர் எதிர்த்து அவியல் செய்தும். இப்போ Square அதனால் ஆதரிப்பவர்கள். நாளை மீண்டும் எதிரி கட்சியாக ஆனவுடன் ஓசூர் விமான நிலையம் எதிர்ப்புத் தெரிவித்து மறுபடியும் அவியல் செய்வேன். இப்படிக்கு மாடல்


Ram Siri
ஏப் 08, 2025 06:57

ரெண்டு இடம் ரெண்டு இடம் ஒரு வருஷமா இது தான் நியூஸ்... செலக்ட் ஒன்


நிக்கோல்தாம்சன்
ஏப் 08, 2025 06:09

ஸ்கொயர் ஸ்கொயர் என்று அலையும் மானிடா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை