உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யு-டியூப் சேனல் நிர்வாகி கைது

சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யு-டியூப் சேனல் நிர்வாகி கைது

திருச்சி: பெண் போலீசார் குறித்து சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய 'ரெட் பிக்ஸ் யு-டியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் தலைமையிலான தனிப்படையினர் டில்லியில் கைது செய்தனர்.'ரெட் பிக்ஸ் யு-டியூப் சேனலில் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதுாறு கருத்துகளை தெரிவித்துள்ளார் என சேலம் மாநகர போலீசின், சோஷியல் மீடியா பிரிவு எஸ்.ஐ., கீதா, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ftg9suhn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து அவதுாறு பரப்புதல், பணிபுரிய விடாமல் தடுத்தல், அனுமதியின்றி தவறான கருத்துகளை வெளியிடுதல், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில், சங்கர் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய 'ரெட் பிக்ஸ் யு-டியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் கோர்ட் இதனை நிராகரித்தது. அநாகரீகமாக விவாதம் செய்த ரெட் பிக் யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து பெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் தலைமையிலான தனிப்படையினர் டில்லியில் கைது செய்தனர். ரயில் மூலம் திருச்சிக்கு அழைத்து வரப்பட உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

sethu
மே 14, 2024 10:13

சார்ந்த சைதாப்பேட்டை பாய் பெண்களை குஸ்பு மற்றும் சிலரை அர்ச்சனை செய்தவருக்கு திமுக ஆராதனை விழா எடுக்கிறதே அதெல்லாம் கணக்கில் போலீஸ் எடுக்காதா ?


vaiko
மே 14, 2024 01:00

முதலில் நீ நித்தியை இந்தியாவிற்கு கொண்டு வா


Kanns
மே 12, 2024 10:46

Why No Actions Taken Against Superiors/ Colleagues Misusing Women Police Happening?Conspiring & Power Misusing Rulers-Police-Judges are Responsible for All Maladies of People-Nation-Laws Police & Judges


Syed ghouse basha
மே 11, 2024 15:22

சபாஷ் சரியான நடவடிக்கை


R Kay
மே 11, 2024 19:16

ஜாபர் சாதிக்கிற்கு அல்வா காத்திருக்கிறது


premprakash
மே 11, 2024 14:58

தி மு க கோர்ட் என்றும் சேர்த்து சொல்லுங்கள்


Lion Drsekar
மே 11, 2024 14:50

இதே போன்று மக்களுக்காக பணியாற்ற வேண்டிய நபர்கள் பணியாற்றாமல் போனால் , ஏமாற்றினால், , துன்பத்துக்கு ஆளாக்கினால் , வாழவிடாமல் தடுத்தால் , லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை செய்வோம் என்று பிடிவாதமாக செயல்படுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க ஆவன செய்தால் மக்கள் ஆட்சியாக மலரும் இவைகள் எல்லாம் கனவுதான் இருந்தாலும் ஒரு நப்பாசை வந்தே மாதரம்


Svs Yaadum oore
மே 11, 2024 13:47

யு-டியூப் சேனல் நிர்வாகி கைதாம் சிறுபான்மையை எப்படி விடியல் மதச்சார்பின்மை கைது செய்யலாம் ??மதம் மாற்றிகளை விடியல் அரசு கைவிட்டு விட்டதா ??


Natarajan Ramanathan
மே 11, 2024 13:12

நித்யானந்தா விடியோவை ஒளிபரப்பிய சன் டிவி நிர்வாகிகளை எப்போது கைது செய்வார்கள்?


Natarajan Ramanathan
மே 11, 2024 13:10

திருச்சி ராமஜெயத்தை கொலை செய்தவன், வேங்கைவயல் குடிநீரில் மனித கழிவு கலந்தவன், செந்தில் பாலாஜி தம்பி இவர்களை எல்லாம் பிடிக்க அரசு ஒழியவேண்டும் இறைவா


p.s.mahadevan
மே 11, 2024 12:36

no rule of law


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை