உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் அமைச்சரானார் செந்தில் பாலாஜி; புதுசு 2; பழசு 2 பேர் பதவியேற்பு!

மீண்டும் அமைச்சரானார் செந்தில் பாலாஜி; புதுசு 2; பழசு 2 பேர் பதவியேற்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: துணை முதல்வராக உதயநிதி இன்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், கோவி செழியன், ஆவடி நாசர் ஆகியோர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.புலி வருது, புலி வருது கதையாக, நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த தமிழக துணை முதல்வர் பதவி விவகாரம், இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. முறைப்படி இன்று துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், சென்னை ராஜ்பவனில் இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடந்தது. இதில், சிறையில் இருந்து ஜாமினில் வந்துள்ள செந்தில் பாலாஜி, பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், கோவி செழியன், ஆவடி நாசர் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.இவர்களில், ஆவடி நாசர், பல்வேறு சர்ச்சைகளால் கடந்தாண்டு பதவி பறிக்கப்பட்டவர். அவரும் இன்று பதவியேற்றார்.அமைச்சர்களாக பதவியேற்ற நால்வருக்கும், கவர்னர் ரவி, முதல்வர், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்துறையும், மதுவிலக்குத்துறையும் வழங்கப்பட்டுள்ளது. ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை, நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறை, மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை, கயல்விழிக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை, முதல் முறையாக அமைச்சர் பொறுப்பேற்கும் கோவி செழியனுக்கு உயர்கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது.அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள், விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.

தந்தை, மகன் யார், யார்?

நாட்டில் வெவ்வேறு மாநிலங்களில் தந்தைக்கு பிறகு மகன் முதல்வராக வந்த நிகழ்வுகள் நடந்துள்ளன. தந்தை முதல்வராக இருக்கும்போதே துணை முதல்வராக மகன் பொறுப்பேற்ற நிகழ்வுகள் இதற்கு முன் இரண்டு முறை மட்டுமே நடந்துள்ளன. கருணாநிதி முதல்வராக இருந்தபோது, துணை முதல்வராக ஸ்டாலின் பதவி வகித்தார். பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் முதல்வராக இருந்தபோது, துணை முதல்வராக அவரது மகன் சுக்பீர் சிங் பாதல் பதவி வகித்தார். அதற்கு அடுத்தபடியாக, இப்போது தான், தந்தை முதல்வர், மகன் துணை முதல்வர் என்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

xyzabc
செப் 29, 2024 23:13

வண்ணான் துணிகள் கணக்கு போடுவது போல உள்ளது


RAAJ68
செப் 29, 2024 22:25

நெஞ்சு வலி இருதயம் அடைப்பு அறுவை சிகிச்சை என்று வேஷம் போட்டு போய் பித்தலாட்டம் செய்து மக்களை முட்டாளாக்கிய இவருக்கு கூடிய விரைவில் நிஜமாகவே நெஞ்சு வலி இருதய அடைப்பு அறுவை சிகிச்சை நடக்கும்.


Dharmavaan
செப் 29, 2024 21:41

தமிழ் நாட்டவன் உணர்ச்சி வசப்பட்ட குடிகார சோம்பேறி அறிவு வயப்பட்டவனல்ல


krishna
செப் 29, 2024 21:31

SUPER DRAVIDA MODEL.


Lion Drsekar
செப் 29, 2024 20:57

நீங்கள் நீடூடி வாழ்ந்து இதே போன்று செய்தலை மென்மேலும் செய்யவேண்டும் என்று வேண்டுகிறோம், தரமற்ற விலை உயர்ந்த அதிக விலைக்கு விற்கப்படும் சாராயத்தை மிக டிக்க அளவில் காய்ச்சவேண்டும், மின்சார கட்டினத்தை நீங்கள் ஆணையிடும் எதுவாக இருந்தாலும் அதை நிறைவேற்ற மக்கள் தயாரக இருக்கிறார்கள், மக்கள் வாழ்வதே உங்களுக்கும் உங்கள் ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுப்பதற்க்கே ஆகவே , உங்களால் என்னவெல்லாம் நினைக்கிறீர்களோ அனைத்தையும் செவ்வனே செய்யுங்கள், உங்களை இவ்வுலகில் எந்த ஒரு துறையும் கேள்வி கேட்க்கும் திராணி இல்லை என்பதை நிரூபித்து விட்டதால் நீங்களே ராஜா உங்கள் இயக்கமே மக்கள் விருப்பம், வாழ்க நலமுடன்


அலாவுதீன்
செப் 29, 2024 20:41

அதிகாரிகளை, தொண்டர்களைத் திட்டி கல்லால் அடித்து விரட்டிய நாசர் பெருமகனார் மீண்டும் அமைச்சராயிட்டார். தியாகிக்கு கிடைத்த பரிசு. உதையின் அன்பளிப்பு.


T.sthivinayagam
செப் 29, 2024 20:02

சாம்பிரானி போடும் தூபகாளை மறத்து வைத்தால் சாமியை கும்பிடமுடியாது என சதி செய்த அண்ணிய சக்திகளை கடவுள் அருளால் மீண்டும் அமைச்சர் ஆனார்


T.sthivinayagam
செப் 29, 2024 19:49

செந்தில் பாலாஜி அவர்கள் அமைச்சர் ஆனார் தமிழம பாஜகவினர் அட்லீட்ஸ் தனி பொறுப்புள்ள மத்திய துணை அமைச்சர்களாது அவார்களா


N Sasikumar Yadhav
செப் 30, 2024 11:15

லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை திருட்டு திராவிட களவானிங்க மாதிரி ஊழல் செய்யாமல் கையாள்கிறார் தமிழக பொக்கிஷம் நிர்மலா சீதாராமன் அவர்கள் . திருட்டு திராவிட மாடல் மொதல்வர் ஸ்டிக்கர் ஒட்டிய உக்ரைன் போர்களத்தில் சிக்கிய தமிழர்களை திறமையாக காப்பாற்றிய மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் யாரு திருட்டு திமுக 200 ரூபாய் ஊ....பியே


நசி
செப் 29, 2024 19:39

சுய நல குடும்ப ஊழல் அராஜகம், பொய், நேர்மையின்மை நாத்திக வாதம் இவை அனைததையும் பகவான் கிருஷ்னரின் பிரளய கால அஸ்திரங்கள்..இன்று எகத்தாளத்தில் ஆர்பரிப்பவர்கள்அழிவர்


Yaro Oruvan
செப் 29, 2024 19:30

விசாரணையில ... போயிட்டாப்புலன்னு ஆர் ஸ் பாரதி கூவுனானே?? அப்பு அதெல்லாம் வீரமா கோவால் ???


சமீபத்திய செய்தி