உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திராவிடம் எல்லாரையும் இணைக்கும் முருகன் மாநாட்டில் உதயநிதி பேச்சு

திராவிடம் எல்லாரையும் இணைக்கும் முருகன் மாநாட்டில் உதயநிதி பேச்சு

சென்னை: ''திராவிடம் யாரையும் ஒதுக்காது; எல்லாரையும் இணைக்கும்,'' என, அமைச்சர் உதயநிதி கூறினார்.பழனியில் நடந்த, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில், சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வழியே, அவர் பேசியதாவது:தி.மு.க., அரசு திடீரென இந்த மாநாட்டை நடத்துவதாக, ஒரு சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இந்த மாநாடு திடீரென நடத்தப்படவில்லை. மூன்று ஆண்டுகளில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஏராளமான சாதனைகளை செய்து விட்டு, இம்மாநாட்டை நடத்துகிறது.தி.மு.க., அரசு யாருடைய நம்பிக்கைக்கும் குறுக்கே நிற்காது. எல்லாருடைய உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கும் அரசு. அறநிலைய துறையின் பொற்காலம் என்றால், அது, தி.மு.க., ஆட்சி தான். நீதிக்கட்சி ஆட்சியின் போது, ஹிந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது.கடந்த மூன்று ஆண்டுகளில், 1,400க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. பழனி கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரியில், மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. விரைவில், மதிய உணவு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.திராவிடம் என்பது எல்லாருக்கும் எல்லாம் என்பது தான். திராவிடம் யாரையும் ஒதுக்காது; எல்லோரையும் இணைக்கும். இதற்கு உதாரணம், அனைத்து ஜாதியினரையும், மகளிரையும் அர்ச்சகராக்கியவர் நம் முதல்வர். அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம், அனைத்து கோவில்களிலும் செயல்படுத்தப்படுகிறது.தமிழகத்தில் மற்ற துறைகளை போல, ஹிந்து சமய அறநிலைய துறையும் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது. இந்த மாநாடு ஆன்மிக மாநாடு மட்டுமல்லாமல், தமிழர் பண்பாட்டு மாநாடாக நடக்கிறது. ஆன்மிகத்தை எல்லாருக்கும் உடையதாக்கும் வகையில் நடக்கும் முருகன் மாநாடு, வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கப் போவது உறுதி.இவ்வாறு, உதயநிதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 64 )

Pushparaj T
செப் 19, 2024 14:52

அமைச்சர் உதயநிதி சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தினார். இப்போது முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தினார். இரண்டும் முரணாக உள்ளது. உதயநிதியின் பதில் வேண்டும்.


Pushparaj T
செப் 19, 2024 08:33

திராவிடம் அனைவரையும் அரவணைக்கும் என்பதுதான் இங்கு பிரச்சினை. அதாவது திராவிடம் தென்னிந்தியாவிற்கானது என்ற அர்த்தத்தில் அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். இதனால் தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் மற்றும் முக்கிய வளங்கள் ஆகியவை அனைத்து தென்னிந்திய மாநிலங்களில் உள்ளவர்களால் பங்கிடப் படும். ஆனால் மற்ற தென்னிந்திய மாநிலங்களில் உள்ள வளங்களை தமிழர்கள் பங்கிட முடியாது என்பதுதான் உண்மை. காரணம் திராவிட அரசியல் தமிழகத்தில் மட்டுமே உள்ளது. அதனால் திராவிட கோட்பாடு அடிப்படையில் தமிழர்களுக்கு எதிரானதாகும்.


நிக்கோல்தாம்சன்
செப் 02, 2024 19:47

மக்களை எவ்வளவு முட்டாள்களாய் நினைத்து நடத்துகிறீர்கள் தமிழக அரசியல்வாதிகளே , பகுத்தறிவு என்பது , அனைத்து விஷயத்தையும் பகுத்து அறிய வேண்டியது , ஆனால் அந்த பேரில் வரும் மக்களே ஒரு மதத்தை மாத்திரம் குறை சொல்லிவிட்டு என்னோட வேலை முடிந்தது என்று அலைவது தமிழகத்தில் மாத்திரம் தான் நடக்கிறது


Ramesh Sargam
செப் 02, 2024 12:38

ஒரு பக்கம் சனாதானத்தை எதிர்த்து பேசுகிறான். மறுபக்கம் முருகன் மாநாட்டில் பங்கெடுக்கிறான். இவன் கிறுக்கா, அல்லது மக்களை கிறுக்கு என்று நினைக்கிறானா...?


panneer selvam
ஆக 31, 2024 17:42

Udaynidhi ji , if Dravidian encircles all means , why do not solve inter state rivers issue with Karnataka , Kerela and AP . Just plucking Hundi money of Palani Temple , made parties through your party contractors


ஜெகதீஸ்வரன் தண்டபானி
ஆக 29, 2024 18:29

சனாதன தர்மத்தை ஒழிக்க முடியவில்லை என்று வாக்கு மூலம் கொடுத்துள்ளார். மகிழ்ச்சி


Narayanan
ஆக 28, 2024 14:53

இரும்பு அடிக்கிற இடத்தில் எறும்புக்கு என்ன வேலை ?? அந்த சொல்வடை போல் ஹிந்து மக்களின் விரோதியாக இருக்கும் திமுக ஏன் இந்த விழாவை நடத்துகிறது ?. பணம் எந்த கோவிலில் அதிகம் புழங்குகிறதோ அங்கே அவர்கள் திமுகவினர் இருப்பார்கள் . ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் வழக்கம் இந்த அரசுக்கு உண்டு . தன்னிச்சையாக கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தாலும் இவர்களுக்கு அறிவிக்க வேண்டும் . இவர்கள் நடத்தியதாக சொல்லிக்கொள்வார்கள் . மகாகேவலம் .


Sathyanarayanan Sathyasekaren
ஆக 27, 2024 21:37

பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி க்கு கிடைத்த வோட்க்கள் இந்த மனைவிக்காக கிருத்துவ மதம் மாறியவனை, முருகனை பற்றி பேசவைத்திருக்கிறது. ஹிந்துக்கள் இப்போதாவது விழித்துக்கொள்ளவேண்டும் இந்த அந்நிய மத நக்கிகளை, வக்ப் வாரிய சட்டம் மூலம் ஹிந்துக்களின் சொத்துக்களை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பு செய்து தரும் ப்ரோக்கர்களை பதவியில் இருந்து துரத்தவேண்டும்.


Murthy
ஆக 27, 2024 13:38

கோபாலபுர குடும்ப சொத்து திராவிடம் .


Partha
ஆக 27, 2024 10:14

இஸ்லாமிய கிறிஸ்துவ மக்களே பாத்துக்கோங்க.. ஈப்போ எங்க அண்ணன் ஹிய்ந்துவ மாறிட்டாரு. வாழ்க திராவிட மாடல். ஹி ஹி ஹி ஹி .. சூப்பர் தலைவா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை