உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேலி, கிண்டலுக்கு முடிவு வரப்போகுது; பிரிட்டீஷ் போர் விமானம் அடுத்த வாரம் தாய்நாட்டுக்கு பறக்க போகுது!

கேலி, கிண்டலுக்கு முடிவு வரப்போகுது; பிரிட்டீஷ் போர் விமானம் அடுத்த வாரம் தாய்நாட்டுக்கு பறக்க போகுது!

திருவனந்தபுரம்: ஜூன் 14ம் தேதி முதல் கேரளாவில் சிக்கித் தவிக்கும், ரூ.640 கோடி பிரிட்டீஷ் போர் விமானம், அடுத்த வாரம் தாய்நாட்டிற்குத் திரும்பக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கேலி, கிண்டல் முடிவுக்கு வரும் என கருதப்படுகிறது.அரபிக்கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டீஷ் கடற்படையின் எப் 35 பி போர் விமானம், ஜூன் 14ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியது. எரிபொருள் பிரச்னையால் தரை இறங்கிய விமானம், எரிபொருள் நிரப்பிய நிலையில் பழுதாகி நின்று விட்டது. பல நாள் முயன்றும், வெளிநாட்டில் இருந்து பொறியாளர்கள் வந்து முயற்சித்தும் பறக்க வைக்க முடியவில்லை.

கேலி, கிண்டல்

பழுதான நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும்,ரூ.640 கோடி பிரிட்டீஷ் கடற்படை போர் விமானம், இணையத்தில் நெட்டிசன்களின் கேலி கிண்டலுக்கு ஆளானது. போர் விமானத்தின் படத்தை வெளியிட்டு தாறுமாறாக விமர்சித்து இருந்தனர். இது பிரிட்டன் அரசுக்கு அவமானமாக கருதப்பட்டது.இதையடுத்து பழுதாகி நிற்கும், விமானத்தை ஆய்வு செய்வதற்காக, பிரிட்டீஷ் விமானப்படையின் பொறியாளர்கள் 24 பேர் கொண்ட குழு, திருவனந்தபுரம் வந்துள்ளது.ஒரு வழியாக, விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே நிறுத்தப்பட்டிருந்த அந்த விமானம், பழுது பார்க்கும் ஹேங்கருக்கு கொண்டு செல்லப்பட்டது.விமானத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, கேரளாவில் சிக்கித் தவிக்கும் பிரிட்டீஷ் போர் விமானம், அடுத்த வாரம் தாய்நாட்டிற்குத் திரும்பக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. “ஹைட்ராலிக் கோளாறு காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்ய பிரிட்டீஷ் பொறியாளர்கள் குழு தற்போது பணியாற்றி வருகின்றனர், அடுத்த சில நாட்களில் பிரிட்டீஷ் போர் விமானம் பறக்கத் தகுதியான நிலைக்குத் திரும்பும். அடுத்த வாரம் தாய்நாட்டிற்குத் திரும்பக்கூடும்' என பெயர் வெளியிட விரும்பாத இந்திய அதிகாரி ஒருவர் கூறியதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் கேலி, கிண்டல் முடிவுக்கு வரும் என கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
ஜூலை 11, 2025 14:43

இந்த தயாரிப்பு நிறுவனத்திடம் வாங்காமல் ரஃபேல் வாங்கியதால்தான் காங் கூட்டாளிகள்( கட்டிங் போச்சே? )போலியான ஊழல் குற்றச்சாட்டு எழுப்பினர்? நல்லவேளையாக நாம் இந்த தேறாத குப்பையை வாங்கி ஏமாறவில்லை .


தியாகு
ஜூலை 11, 2025 11:44

நல்லவேளை இந்த விமானம் கேரளாவில் சிக்கி கொண்டது. இதுவே டுமிழ்நாட்டில் சிக்கி இருந்தால் கட்டுமர திமுகவின் உடன்பிறப்புகள் விமானத்தை யாருக்கும் தெரியாமல் ஆட்டையை போட்டு பழைய இரும்பு கடையில் விற்றுவிட்டு டாஸ்மாக்கில் சரக்கு வாங்கி குடித்துவிட்டு ரோட்டில் செல்லும் பெண்களை வம்புக்கு இழுத்திருப்பார்கள்.


ramesh
ஜூலை 11, 2025 12:28

தங்களின் பழக்க வழக்கம் அழகாக படம் போட்டு வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் . தங்களின் பனி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்


தியாகு
ஜூலை 11, 2025 14:43

உன்னால் ரமேஷுக்கு ஏன் கோபம் வருகிறது? ஹி...ஹி... ஹி...


Ravi Prasad
ஜூலை 11, 2025 10:46

What insults? It is also machine, it may malfunction. There is no embarrassment.


Ganesh Subbarao
ஜூலை 11, 2025 11:53

But it is supposed to be the most advanced piece of flying machine ever produced and comes with a huge price tag. If this happens in a combat situation, it might be very bad. Surly this is a huge embarrassment for makers USA and users UK.


Srinivasan Krishnamoorthy
ஜூலை 11, 2025 12:04

however, western media would have mocked us had our fighter plane got struck elsewhere.. we are in the slave mentality towards west all the time/ India is no longer the same, britain cannot handle our air strikes. their stealth did not work..


ஆரூர் ரங்
ஜூலை 11, 2025 10:42

பறக்கும். ஆனா...பறக்காது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை