உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மியான்மருக்கு உதவ அமெரிக்கா தயார்: டிரம்ப் அறிவிப்பு

மியான்மருக்கு உதவ அமெரிக்கா தயார்: டிரம்ப் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: நிலநடுக்கத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மியான்மருக்கு உதவ, அமெரிக்கா தயாராக இருப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் காரணமாக, 150 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இடிபாடுகளை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மியான்மர், தாய்லாந்துக்கு உதவ உலக நாடுகள் பலவும் முன்வந்துள்ளன. நிலநடுக்கத்தால் உருக்குலைந்த கட்டிடங்கள், உடைந்த பாலங்கள், சேதமடைந்த ரோடுகள் பற்றிய புகைப்படங்களை கண்டதாகவும், அமெரிக்கா உதவ உள்ளதாகவும், செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை