உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி ரசீது மூலம் வசூல் ஏட்டுவிடம் விசாரணை

போலி ரசீது மூலம் வசூல் ஏட்டுவிடம் விசாரணை

மதுரை : மதுரையில் போலி ரசீது அச்சடித்து வசூலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஏட்டு சேகரிடம் நேற்று விசாரணை நடந்தது. கடந்த 2008ல் புதூர் ஏட்டாக இருந்தவர் சேகர். இவர் போலியாக ரசீது அச்சடித்து, பெட்டி கேஸ் உட்பட சில வழக்குகளுக்கு அபராதம் வசூலித்து அரசுக்கு வருவாய் இழப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க அப்போதைய கமிஷனர் நந்தபாலன் உத்தரவிட்டார். சேகரிடம் இரு உதவிகமிஷனர்கள் விசாரணை நடத்திய நிலையில், புகார் கிடப்பில் போடப்பட்டது. புகாரை விசாரித்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய போலீஸ் கட்டுப்பாட்டு அறை உதவிகமிஷனர் அந்தோணி ஞானசேகரனுக்கு கமிஷனர் கண்ணப்பன் உத்தரவிட்டார்.நேற்று சேகரிடம் விசாரணை நடந்தது. இதில் சில இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்களுக்கும் தொடர்பு இருப்பதாக அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் அவர்களிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை