உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காதலர் தின கொண்டாட்டம்: மெரினாவில் கெடுபிடி

காதலர் தின கொண்டாட்டம்: மெரினாவில் கெடுபிடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மெரினா: சென்னையில், காதலர்கள் அதிகம் கூடும் இடமான மெரினா கடற்கரையில் அத்துமீறுவோரை கண்காணிக்க, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.காதலர் தினம், நாளை பிப்.14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் மெரினா, எலியட்ஸ் கடற்கரை, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில், காதலர்கள் அதிகம் கூடுவர். குறிப்பாக, மெரினா கடற்கரையில் காதலர்கள் வருகை அதிக அளவில் இருக்கும்.இந்நிலையில், மெரினாவில் அத்துமீறும் காதல் ஜோடிகளை கண்காணிக்க, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதுமட்டுமின்றி, காதலர் தினம் ஒரு கலாசார சீர்கேடு எனக் கூறும் சிலர், காதல் ஜோடிகளை மிரட்டவும் செய்கின்றனர்.யாராவது இதுபோல் மிரட்டினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு உயரதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும், பள்ளி மாணவர்களில், 16 வயதுடைய காதல் ஜோடிகளை கண்காணித்து, அவர்களை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக பாதுகாப்பு பணியில், பெண் போலீசாரை அதிகமாக ஈடுபடுத்தவும் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Mohamed Younus
பிப் 13, 2024 18:02

என்ன செய்ய...? நாடு எங்கே செல்கிறது ? பாராளுமன்ற ,சட்டமன்ற அவைகள் நடக்கும்போது ஆபாச படங்கள் பார்க்கும் மக்கள் பிரதிநிதிகள் இருக்கும்போது மக்களும் அப்படிதான் செல்வார்கள். யாரை குறை சொல்லி என்ன பயன்?


வெகுளி
பிப் 13, 2024 16:37

பிடிபடும் இடத்திலேயே உடனடியாக திருமணம் செய்து வைக்கப்படும் என்று அறிவியுங்கள்...


vnatarajan
பிப் 13, 2024 16:15

இந்திய கலாச்சாரத்தை அழிக்கும் மேற்கத்திய விஷ பாம்பே இந்த காதலர் தினகொண்டாட்டம்


venugopal s
பிப் 13, 2024 14:41

காதலர்களை மகிழ்ச்சியாக காதலர் தினத்தை கொண்டாட விடுவோமே!


sridhar
பிப் 13, 2024 22:48

திமுக சிந்தனை. யார் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும்…..


duruvasar
பிப் 13, 2024 11:53

பொது இடத்தில் கட்டிப்பிடிப்பது போன்ற சில்மிஷ விஷயங்கள் செய்வதை கண்காணிக்கும் போலீசார் நிலைதடுமாறாமல் இருந்தால் சரி. ஏற்க்கனவே திரைப்படங்களில் போலீஸ்காரர்களை என பெயரிட்டு பேசுவதைபோல் காட்சிகள் அமைக்கிறாரகள்.


Raa
பிப் 13, 2024 11:04

"அத்துமீறுவோரை கண்காணிக்க..." - எதுவரைக்கும் அனுமதியுண்டு... எதற்குப்பிறகு அனுமதி இல்லை என்று சொன்னால்தானே காதலர்களுக்கு தெரியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லிமிட் உண்டு. எதற்கு வழிகாட்டுதல் உண்டா என்று கேட்டும் என்ன பண்ணுவீர்கள் ஆபீஸர்ஸ்? பொது இடத்தில 'கண்ணியமாக' என்பது போதம் பொதுவாக உள்ளதே? காதலர் தினமே கிபிட் கடைகள் உருவாக்கியது... சமுதாய சீரழிவு.


rajan_subramanian manian
பிப் 13, 2024 10:55

ஓவராக பழக வேண்டியது. ரூம் எடுத்து தங்கவேண்டியது. வேண்டாத போட்டோவை விரும்பிகேட்டான் என்று ஷேர் பண்ணுவது. அப்புறம் ஐயோ அப்பா என்று கத்த வேண்டியது. மேல உள்ள போட்டோ சகிக்கவில்லை. பொது வெளியிலேயே இப்படி என்றால் மறைவில் படு மோசமாக இருப்பார்கள் போல? இந்த காதலர் தினம், ஹாப்பி ஸ்ட்ரீட் போன்ற கலாச்சார சீரழிவு கழக ஆட்சி இருக்கும் வரை போகிறது போல.


Seshan Thirumaliruncholai
பிப் 13, 2024 10:52

உள்ளதோடு உள்ளம் பேசுவது இணைவது காதல். இது மூன்றாவது நபருக்கு தெரியாது. காதலர் தினம் தான் காதல் நாள் என்றால் மற்ற நாட்கள்?


Prasanna Krishnan R
பிப் 13, 2024 09:51

Make this as happy marriage day.


Kanns
பிப் 13, 2024 09:02

This is Misuse of Freedom. Ban & Impose Heavy Penalty on Cultural & Moral DestroyersValentine Gangsters


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி