உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபையில் த.மா.கா., குரல் ஒலிக்க வேண்டும்: வாசன் விருப்பம்

சட்டசபையில் த.மா.கா., குரல் ஒலிக்க வேண்டும்: வாசன் விருப்பம்

சென்னை: ''தமிழக சட்டசபையில், த.மா.கா., குரல் ஒலிக்க வேண்டும்,'' என, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் உள்ள த.மா.கா.,வின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. சென்னை பல்லாவரத்தில், நடந்த பொதுக்குழுவுக்கு, த.மா.கா., தலைவர் வாசன் தலைமை வகித்தார். கூட் டத்தில், வாசன் பேசியதாவது: தமிழகத்தில், மரியாதைக்குரிய கட்சிகளில், முதல் வரிசையில் அமரும் தகுதி பெற்றது த.மா.கா., காமராஜர் காலத்தில் இருந்து கட்சியில் இருக்கும் நிர்வாகிகள், நம்முடன் அமர்ந்திரு ப்பது பெருமை. தமிழகத்தில், 11 ஆண்டுகளாக, தேர்தல் வெற்றி பெற முடியாமல், சில இயக்கங்கள் இருந்திருந்தால், இன்று காணாமல் போயிருக்கும். ஆனால், த.மா.கா., உயிரோட்டமான கட்சியாக இருப்பதற்கு நிர்வாகிகளும், தொண்டர்களும்தான் காரணம். சட்டசபையில் த.மா.கா., குரல் ஒலிக்க வேண்டும். அதற்கு, சட்டசபை தேர்தலில், நம் கூட்டணி வெற் றிக்கு, கூட்டாக முயற்சி எடுக்க வேண்டும். நம் வெற்றியை நோக்கி, இந்த பொதுக்குழு கூடி உள்ளது. மக்கள் விரோத தி.மு.க., அரசை வீழ்த்த வேண்டும் என்ற, கருத்துடைய கட்சிகள், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து, தி.மு.க.,விற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் . இவ்வாறு அவர் பேசினார். பொதுக்குழுவில், 'ஜி.எஸ்.டி.,யை குறைத்த, பிரதமர் மோடிக்கு பாராட்டு; தமிழகத்தில் அதிகரித்துள்ள ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தை சுட்டிக்காட்டி, தமிழகம் முழுதும் பிரசார இயக்கம் நடத்துவது; 'மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vasan
அக் 26, 2025 02:36

2026 வரை காத்திருக்க வேண்டாம். இப்போது சட்டசபை வெறிச்சோடி உள்ளது. இப்போதே த.மா.க வினர் எதையாவது பேசி, ஒலி பெருக்கி ஸ்பீக்கர் செட் பண்ணி, ஒலிக்க வைத்து விடலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை