உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அழைத்தார் திருமா; அ.தி.மு.க., வருமா! மாறுகிறதோ கூட்டணி பார்வை?

அழைத்தார் திருமா; அ.தி.மு.க., வருமா! மாறுகிறதோ கூட்டணி பார்வை?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமது கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.,வும் பங்கேற்கலாம் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2ம் தேதி மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் நடத்துகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. கட்சியின் முன்னணி நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் மாநாடு தொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தல்களை வழங்கினார்.இந்நிலையில் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டில் அ.தி.மு.க.வும் பங்கேற்கலாம் என்று திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது திருமாவளவன் கூறியதாவது; மதுவிலக்கை தேசியகொள்கையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முன்வரும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி அளிக்க வேண்டும். மது ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரசாரத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஈடுபடுத்த வேண்டும். தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும். மது விற்பனை மூலம் வருவாயை அரசு பெருக்க நினைப்பது ஏற்புடையது அல்ல. மதுவிலக்கு அவசியம், அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஒரு திறந்தவெளி அறிவிப்பாக இந்த மாநாட்டை நடத்துகிறோம்.மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் விரும்புகின்றன. அ.தி.மு.க.,வும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறது. வேண்டும் என்றால் நாங்கள் நடத்தும் இந்த மாநாட்டில் எங்களுடன் அ.தி.மு.க.,வும் சேர்ந்து மதுவிலக்கை வலியுறுத்தட்டும் என்று திருமாவளவன் கூறினார்.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வுக்கு விடுத்துள்ள அழைப்பு அரசியல் அரங்கில் சற்று உன்னிப்பாக பார்க்கப்படுகிறது. இது குறித்து தமிழக அரசியலை உற்று நோக்குபவர்கள் கூறுவதாவது; மதுவிலக்கு மாநாடால் எந்த பயனும் ஏற்படபோவதில்லை என்று எல்லோரும் அறிந்த ஒன்று. மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் ஒரு மாநாடு மாநில அல்லது மத்திய அரசுக்கு என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது? சில நாட்களுக்கு முன்னர் சட்டப்பேரவைத் தேர்தலில் மெகா கூட்டணி அமையும் என்று அ.தி.மு.க., அறிவித்துள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகளின் இந்த அழைப்பை அவ்வளவு எளிதில் ஒதுக்கி வைத்துவிட முடியாது. மாநாட்டில் என்ன மாதிரியான தீர்மானங்கள், நிலைப்பாடுகள் எடுக்கப்படும் என்பதை பொறுத்தே அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகளை கணிக்க முடியும் என்று அவர்கள் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

மோகனசுந்தரம்
செப் 10, 2024 21:24

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பழனியாண்டி. அதுவும் அயோக்கிய பழனியாண்டி.


bgm
செப் 10, 2024 20:54

அங்க போனா அட்லீஸ்ட் பிளாஸ்டிக் chair இல்லமல் வேற chair கெடைக்கும் அப்பிடின்னு ஒரு நப்பாசை தான்


Bala
செப் 10, 2024 20:38

ராயபக்சாவை அழைக்கவில்லையா ?


Sathish
செப் 10, 2024 19:57

திருமாவை ஆதரிக்க மாட்டார்கள், ஆனால் மதுவிலக்கை எப்போதும் மக்கள் ஆதரிப்பார்கள். உங்கள் கருத்தை திருத்திக்கொள்ளுங்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 10, 2024 17:54

தனது கட்சியினரை மது அருந்தவேண்டாம் என்று எப்போதாவது தெருமா வலியுறுத்தியது உண்டா ????


theruvasagan
செப் 10, 2024 19:06

அதெப்படி கேப்பாரு. சரக்கு மிடுக்குன்னு சொல்லிச் சொல்லி வளர்த்த ....குட்டிகளாச்சே. இப்ப வேண்டாம்னா கேக்குங்களா.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 10, 2024 17:54

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முன்வரும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி அளிக்க வேண்டும். தெருமா டாஸ்மாக் மூலம் கிடைத்த வருமானத்தில் ஐம்பது சதவிகிதம் மத்திய அரசுக்கு கொடுக்கவேண்டும் என்று எப்பொழுதாவது வற்புறுத்தியதுண்டா ?? இல்லல்ல ?? அப்ப அவன் மட்டும் டாஸ்மாக்கை தூக்கிட்டா காசு எப்படி கொடுப்பான் ??


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 10, 2024 17:42

இவனை அதிமுக கூட்டணியில் சேர்த்தா அதிமுகவுக்கு கிடைச்ச எம் ஜி ஆர், ஜெ ஜெ விசுவாச ஓட்டுக்களும் வழிச்சுக்கிட்டு போயிரும் ...... கதவை தொறந்து வெச்சா எதுவும் நுழையும் .....


sankaranarayanan
செப் 10, 2024 17:24

தூங்கிக்கிடந்தவர் இவர் திடிரென்று எழுந்து நானும் அரசியல்வாதிதான் என்கிறார். இவர் காலம் முடிந்துவிட்டது மக்கள் இனி இவரை யாருமே ஆதரிக்க மாட்டார்கள்


Ms Mahadevan Mahadevan
செப் 10, 2024 16:53

சுயநலவாதி. இவரை தேர்ந்து எடுத்த மக்களை சொல்லணும்.


ராமகிருஷ்ணன்
செப் 10, 2024 15:06

இதெல்லாம் திமுகவிடம் அதிக சீட் கேக்க குருமா செய்யும் டகால்டி வேலை. திமுக எளிதாக சமாளிக்கும். குருமாவுக்கு இடம் கொடுத்து பா மா கா வை இழக்க அதிமுக விரும்பாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை