உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு; கோர்ட்டில் அரசு தரப்பு தகவல்

வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு; கோர்ட்டில் அரசு தரப்பு தகவல்

சென்னை: 'வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு உள்ளது. முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் இந்த பாதகச்செயலை செய்துள்ளனர். முரளிராஜா பொய்த்தகவல் பரப்பியுள்ளார்' என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், 2022ம் ஆண்டு டிச., 26ல், குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை, இரண்டு ஆண்டுக்கு மேலாக, சி.பி.சி.ஐ.டி., விசாரித்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9hkdwv4x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கை, சி.பி.ஐ., அல்லது சிறப்பு புலனாய்வு விசாரிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜ்கமல், மார்க்ஸ் ரவீந்திரன் உள்ளிட்டோர் பொது நல வழக்கு தொடர்ந்தனர். அவற்றை விசாரித்த உயர் நீதிமன்றம், மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடிக்குமாறு, சி.பி.சி.ஐ.டி.,க்கு உத்தரவிட்டிருந்தது. பின், இந்த வழக்குகள், நீண்ட நாட்களாக விசாரணைக்கு வரவில்லை.இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி., விசாரணை முடிந்து, புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியதாவது: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு உள்ளது. முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் இந்த பாதகச்செயலை செய்துள்ளனர். முரளிராஜா பொய்த்தகவல் பரப்பியுள்ளார். முத்துக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குற்றம் செய்துள்ளனர். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, அறிக்கையை மனுவாக தாக்கல் செய்யும் படி தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. இந்த வழக்கில் இரண்டு ஆண்டுக்கு பிறது துப்பு துலங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Barakat Ali
ஜன 24, 2025 17:38

தொடர்பு ???? கலந்து யாரு–ன்னு கோர்ட்டு கேக்கலையா ???? கோர்ட்டு எப்படி இந்த காமெடியை எல்லாம் ஏத்துக்குது ????


என்றும் இந்தியன்
ஜன 24, 2025 17:13

வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு யார் அது???


அப்பாவி
ஜன 24, 2025 16:15

டி.என்.ஏ சோதனை செஞ்சாங்களே .... ஏதாவது மாட்டிச்சா?


Kasimani Baskaran
ஜன 24, 2025 15:06

தொடர்பா அல்லது அவர்களின் மலத்தைத்தான் கலந்தார்களா என்பதை தெளிவாக சொல்லாமல் வெறுமனே தொடர்பு என்றால் என்ன அர்த்தம்? வழக்கு நிற்க வாய்ப்பில்லை.


guna
ஜன 24, 2025 15:00

எல்லாரும் சீமான் பக்கம் போய்விட்டதால், இங்கு முட்டு குடுக்க ஆள் இல்லை...


திகழ்ஓவியன்
ஜன 24, 2025 14:25

“சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில், வேங்கைவயல், இறையூர் கிராமங்கள் அடங்கிய முடுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆபரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்ததால், பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில், குடிநீரில் நாற்றம் வருவதாக முரளிராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


திகழ்ஓவியன்
ஜன 24, 2025 14:03

சரி அவர் விலகி விடுகிறார் நீங்கள் அவரை எதிர்த்து அந்த இடத்தில போட்டி போட தயாரா, வேலைய பாருங்க எப்ப பார்த்தாலும் ஜாதி மதம் ஹிந்து வேறு வேலை இல்லை அதுவும் AI CHATGPT என்று எல்லாம் உலகம் போயி கொண்டு இருக்கு


sundarsvpr
ஜன 24, 2025 13:44

அதுத்தம் கலந்த தண்ணீரை அரசு என்ன செய்தது என்பதை பற்றி நீதி மன்றம் மனதில் கொண்டதா என்று தீர்ப்பில் வருமா?