உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.பி.சி.ஐ.டி., அறிக்கையை ஏற்க முடியாது; நீதி விசாரணை ஆணையம் வேண்டும்; திருமாவளவன்

சி.பி.சி.ஐ.டி., அறிக்கையை ஏற்க முடியாது; நீதி விசாரணை ஆணையம் வேண்டும்; திருமாவளவன்

சென்னை: 'வேங்கைவயல் வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை இறுதியானது அல்ல. நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்', என்று முதல்வரை சந்தித்த வி.சி.க., தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., சந்திரகுமாரின் பதவியேற்பு விழாவில் வி.சி.க., எம்.பி., திருமாவளவன் கலந்து கொண்டார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: தி.மு.க., பெற்றுள்ள ஓட்டுகள், சமூக நீதிக்கான தேசம் என்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. ஈ.வெ.ரா.,வை தமிழுக்கும், தமிழகத்திற்கும் எதிரானவர் என்ற திரிபுவாத அரசியலை சங்பரிவார் அமைப்புகள் உயர்த்தி பிடித்திருக்கின்றன. ஈ.வெ.ரா., என்ற அடையாளத்தை சிதைத்து விட்டால், திராவிட அரசியலின் வேரை வெட்டி வீழ்த்த முடியும் என்று சங்பரிவார் நம்புகிறது. பண்டிதர் அயோத்தி தாசர், ரெட்டைமலை சீனிவாசன் ஆகியோர் காலத்தில் இருந்தே திராவிட அரசியல் இருந்து வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க., போட்டியிடாமல் போனதற்கு, சங்பரிவாரின் சூழ்ச்சி தான் காரணம் என்று அறிய முடிகிறது. அவர்கள் எல்லோரும் கூட்டுச் சேர்ந்து, தி.மு.க.,வா? அல்லது தி.மு.க.,வை எதிர்க்கின்ற அரசியல் கட்சியா? என்ற விவாதத்தை நகர்த்தினார்கள். அதில், அவர்கள் வெற்றி பெறவில்லை. அவர்களின் ரகசிய கூட்டணி அம்பலப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் மக்கள் பாடம் புகட்டியுள்ளனர், எனக் கூறினார். தொடர்ந்து, முதல்வரிடம் 4 கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்ததாகவும் அவர் கூறினார். 4 கோரிக்கைகள்* வேங்கைவயல் வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை இறுதியானது அல்ல. நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். * பட்டியல் சமூக அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தொடர்பாக சட்டம் இயற்ற வலியுறுத்தல்* பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் வணிக வளாங்கள் கட்டப்பட்டு ஏலம் விடப்படுகின்றன. அவற்றில் பட்டியல் மற்றும் பழங்குடி சமூக தொழில்முனைவோருக்கு வணிக வளாகங்கள் ஒதுக்க வேண்டும்* தமிழகத்தில் பெரும் சாதிய வன்கொடுமைகள் பெருகி வருகிறது. அதனை சட்டப்படி தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல், இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Ganeshan R
பிப் 11, 2025 12:49

இதே வேறு சமூகத்தார் செய்ததாக தீர்ப்பு வந்திருந்தால் இந்த குர்மா வேறு மாதிரி பல் இளித்திருப்பர். கூட்டணிக்குள் சலசலப்பு வரும் என்பதால்தான் இந்த தீர்ப்புகூட இரண்டு ஆண்டுகள் தாமதமாகி இருக்கலாம் என்று சந்தேகம் வருகிறது.


அப்பாவி
பிப் 11, 2025 10:52

DNA டெஸ்ட் செஞ்சு கண்டு பிடிச்சு சொன்னாக்கூட திருமா ஒத்துக்க மாட்டாரு. அவிங்க ஆளுங்க மேலே அவ்ளோ நம்பிக்கை.


ராமகிருஷ்ணன்
பிப் 11, 2025 07:27

ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து வெளியே போகிறேன் என்று சொல்ல வந்திருக்கலாம்.


karupanasamy
பிப் 11, 2025 05:16

சிறுத்த குட்டிங்களா அண்ணனுக்கு வாய் கொப்பளிக்க பன்னீர் பாட்டில் ரெடியா


நிக்கோல்தாம்சன்
பிப் 11, 2025 03:56

இதுக்கு பேசாம


V வைகுண்டேஸ்வரன்
பிப் 10, 2025 22:36

ஸ்டாலின் அவர்களே, ஏன் ஆபீசுக்குள் விட்டீர்கள்? சிறுத்தை என்று சொல்லிக்கொண்டு திரியும் சிறுநரி. ஆர் எஸ் எஸ் சின் கைக்கூலி , விரட்டி விடுங்கள்.


பேசும் தமிழன்
பிப் 11, 2025 07:40

என்ன தனக்கு தானே சூனியம் வைத்து கொள்கிறாய்? 14 கட்சி கூட்டணி இருந்தும் RK நகர் இடைதேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.... அதெல்லாம் நியாபகம் இல்லையா ???


V வைகுண்டேஸ்வரன்
பிப் 10, 2025 22:31

ஸ்டாலின் அவர்களே, இவரை சந்திக்க ஏன் அனுமதித்தீர்கள்?? சிறுத்தை தோல் போர்த்திக் கொண்டு அலையும் சிறுநரி தான் திருமா.


theruvasagan
பிப் 10, 2025 22:15

ஓவர் ஆக்டிங் குடுத்தா ஒடஞ்ச பிளாஸ்டிக் சேர் கூட கிடைக்காது. தரையில குந்த வெச்சருவானுக. பாரத்து சூதனமா நடந்துக்கணும்


Raj S
பிப் 10, 2025 22:09

எடுக்கறது பிச்சை அதுல... ஹா ஹா ஹா


S.VIJAYARAGHAVAN
பிப் 10, 2025 21:20

பிளாஸ்டிக்சேர்,எதற்கெடுத்தாலும் சங்பரிவார் தான் காரணம் வாய் கூசாமல் சொல்றியே..உன்னையெல்லாம்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை