மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
3 hour(s) ago | 13
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
10 hour(s) ago | 3
மதுரை : அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட கால்நடை உதவி டாக்டர்களை பணி நிரந்தரம் செய்வதாக தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறிய நிலையில், தங்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக அரசு உதவி கால்நடை டாக்டர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.அவர்கள் கூறியதாவது:ஜெயலலிதா முதல்வராக இருந்த போது விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள், கறவை பசு வழங்குதல் மற்றும் ஏனைய திட்ட பணிகளுக்காக கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் அரசு கால்நடை உதவி டாக்டர்கள் 843 பேர் 10(ஏ)1 என்ற அடிப்படையில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தற்காலிக பணி நியமனம் செய்யப்பட்டோம். இதை எதிர்த்து சில கால்நடை டாக்டர்கள் உச்சநீதிமன்றம் சென்றநிலையில், தற்போது இருக்கும் நிலையில் பணியில் தொடரதீர்ப்பு வழங்கியது. இதற்கிடையில் தமிழக அரசு 2019 ல் 1021 கால்நடை உதவி டாக்டர் காலி பணியிடங்களுக்கான (10 (ஏ) 1 நீங்கலாக) தேர்வு நடத்தியது. இதில் தற்காலிக உதவி டாக்டர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஆண்டுக்கு 5 மதிப்பெண் வீதம் பத்தாண்டுகள் பணியில் இருந்ததால் 50 மதிப்பெண்கள் எங்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. இதன் மூலம் 450 பேர் தேர்வு எழுதி வெற்றி பெற்றனர். மீதி 240 பேர் தேர்வு பெறாத நிலையில் அவர்களை வெளியேற்ற தற்போதைய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் தி.மு.க தேர்தல் அறிக்கையில் எங்களை நிரந்தர பணி நியமனம் செய்வதாக அறிவித்தது. தற்போது மாற்றிப் பேசுவதால் 240 பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. நாங்கள் முன்பு படித்த கால்நடை மருத்துவ பாடத் திட்டத்திற்கும் தற்போது உள்ள பாடத்திட்டத்திற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. படித்து பல ஆண்டுகள் ஆன நிலையில் புதிதாக வரும் மாணவர்களுடன் போட்டியிட முடியாத சூழ்நிலையில் உள்ளோம். எனவே தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தபடி தமிழக அரசு எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றனர்.
3 hour(s) ago | 13
8 hour(s) ago | 1
10 hour(s) ago | 3