உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவன்மலை உத்தரவு பெட்டியில் திருவோட்டில் விபூதி - ருத்ராட்சம் 

சிவன்மலை உத்தரவு பெட்டியில் திருவோட்டில் விபூதி - ருத்ராட்சம் 

திருப்பூர்:சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், விபூதி நிறைந்த திருவோடு, ஒரு ருத்ராட்சம் மற்றும் திருப்புகழ் மருந்து புத்தகம் வைத்து சிறப்பு பூஜை நடந்தது.திருப்பூர் மாவட்டம், காங்கயம் - சிவன்மலை ஸ்ரீசுப்பிரமணியர் கோவிலில், ஆண்டவர் உத்தரவு பெட்டி வழிபாடு நடைமுறையில் உள்ளது. முருகப்பெருமான், பக்தர்கள் கனவில் தோன்றி உணர்த்தும் பொருட்கள், ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைத்து வழிபடுவது வழக்கமாக இருக்கிறது.நவ., 12ல் விளக்கு வைத்து வழிபாடு நடந்தது. கடந்த, 9ம் தேதி சிறிய கலசத்துடன் கங்கை தீர்த்தம் வைத்து பூஜை நடந்து வந்தது. இந்நிலையில், உசிலம்பட்டியை சேர்ந்த பக்தர் குடும்பத்தினர் சார்பில், புதிய பொருட்கள் வைக்கப்பட்டன.சிவன்மலை கோவில் சிவாச்சார்யார்கள் கூறியதாவது: கங்கை தீர்த்தம் வைத்த, 11வது நாளில் பொருள் மாறியுள்ளது. தற்போது, திருவோடு நிறைய விபூதியும், அதன் மீது ருத்ராட்சமும் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், நோய் தீர்க்கும் பதிகம் அடங்கிய திருப்புகழ் மருந்து என்ற புத்தகமும் வைக்கப்பட்டுள்ளது. விபூதியும், ருத்ராட்சமும் நோய் தீர்க்கும் மருந்து என்பதை முருகப்பெருமான் உணர்த்தியிருக்கிறார்.ருத்ராட்சம் அணிந்து, விபூதி தரித்து இறைவழிபாட்டில் பங்கேற்க வேண்டும். செவ்வாய் கிழமை திருப்புகழ் பாடினால் தீராத வினை தீரும் என்பர். செவ்வாய்க்கிழமை உத்தரவு பெட்டி பொருள் மாறியுள்ளதால், வீட்டிலும், விபூதி மற்றும் உத்ராட்சம் வைத்து, திருப்புகழ் பாடல்களை பாராயணம் செய்து இறையருள் பெறலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
டிச 18, 2024 10:53

எனக்கு கனவில் யானை வந்திச்சு


Prabhu P
டிச 18, 2024 10:33

இதுவும் கடந்து போகும்


N Annamalai
டிச 18, 2024 09:40

ஒரு முறைக்குக்கூட நடக்காமல் போனது இல்லை .எங்கள் நம்பிக்கை .கங்கை தீர்த்தம் இருந்த பொது மழை புயல் வரவில்லையா சென்ற வாரம் .உங்களுக்கு இஷ்டம் இல்லை என்றால் எதற்கு கேலி செய்கிறீர்கள் .85 சதவீதம் உள்ள மக்கள் அமைதியாக கேலி செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதாக இருக்க வேண்டாம் .மக்கள் வெகுண்டு எழும் நேரம் வெகு தூரம் இல்லை .கோவிலை சாமியை கேலி செய்ய கூடாது .அனைவரும் இந்து பேர் பின் ஒளிந்து கொண்டு ஆடுகிறீர்கள் .உண்மை யானா சர்ச் அழைக்கும் பேரை சொல்லி பேசவும் .


Mohan Raj
டிச 18, 2024 08:39

தண்ணீர் வைத்து பூஜை செய்த போது சுனாமி வந்தது


Mani . V
டிச 18, 2024 06:12

இந்தப் பெட்டியில் அந்தப் பொருட்கள் தானாக வருவதில்லை. ஒருவர் தனது கனவில் வந்தது என்று உருட்டி இதை வைக்கிறார்கள். இதுவரையில் இந்த பெட்டியில் வைத்திருந்த பொருட்களுக்கு சமமான எந்த நிகழ்வாவது நடந்துள்ளதா? அன்னப்பூரணி ஸ்பிரிங்க் சீட்டில் உட்கார்ந்து குதித்து ஏமாற்றுவது மாதிரி, சிலர் பலரை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.


Chan
டிச 18, 2024 08:31

இந்நாள் வரை தயிர் வடை சாப்பிட்டு இருக்காரா?


DUBAI- Kovai Kalyana Raman
டிச 18, 2024 08:38

உங்களுக்கு என்ன பிரச்சனை, கனவு ல வந்த சாமான்களை வைக்கிறார்கள்.. நடப்பது நடக்காமல் போவது வேற விஷயம் ..நடந்தாலும் உனக்கு தெரிய போவது இல்லை ..ஆன்மிக நிகழ்வை, நம்பிக்கையை இப்படி கிண்டல் பண்ண தேவை இல்லை ..உனக்கு நம்பிக்கை இல்லாட்டி ..வேற வேலைய பார்க்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை