உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / " பகல்வேஷ பிரசாரம் மக்கள் மதிக்கவில்லை" - முதல்வர் ஸ்டாலின்

" பகல்வேஷ பிரசாரம் மக்கள் மதிக்கவில்லை" - முதல்வர் ஸ்டாலின்

சென்னை: 'தமிழகத்தை பொறுத்தவரை 2019ம் ஆண்டு முதல் தி.மு.க., தலைமையிலான இண்டியா கூட்டணியில் வெற்றி தொடர்கிறது' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: மக்களோடு நாங்கள் இருக்கிறோம். மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி மூலம், மக்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள் என்பது உறுதியாகி உள்ளது. இடைத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு மாபெரும் வெற்றி தந்த விக்கிரவாண்டி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி. திமுக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க வெற்றியாக இடைத்தேர்தல் வெற்றி அமைந்துள்ளது.

இண்டியா கூட்டணியின் வெற்றி

நாள்தோறும் நல்ல திட்டங்கள் என சாதனை செய்து வரும் தி.மு.க., அரசுக்கு மகுடம் சூட்டுவதாக விக்கிரவாண்டி வெற்றி அமைந்துள்ளது. இடைத்தேர்தலிலேயே போட்டியில்லை என்ற பா.ம.க., விக்கிரவாண்டியில் போட்டியிட முன்வந்த மர்மம் இன்னமும் விலகவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை 2019ம் ஆண்டு முதல் தி.மு.க., தலைமையிலான இண்டியா கூட்டணியில் வெற்றி தொடர்கிறது.

அவதூறு

சில கட்சிகளின் தயவால், மத்தியில் ஆட்சியமைத்த பா.ஜ.,வுக்கு தோல்வி முகமே இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. நாடு முழுவதும் 13 இடங்களில் நடந்த இடைத்தேர்தலில் 11 இடங்களில் இண்டியா கூட்டணி முன்னிலையில் உள்ளது. அவதூறுகளையும், பொய்களையும் திமுக மீதும், என் மீதும் விதைத்து தங்களது தோல்வியை மறைக்க மிகக் கீழ்த்தரமான பிரசாரத்தை பா.ஜ., செய்தது. பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பிரசாரத்தை மக்கள் மதிக்கவே இல்லை. இந்த வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

விஜய்
ஜூலை 14, 2024 13:32

லட்டு வாங்கி தின்ற கூட்டம் இருக்கிற வரைக்கும் இவங்கள மாதிரி அரசியல்வாதிக்கு கொண்டாட்டம்தான்


rao
ஜூலை 13, 2024 21:56

Money and Muscle power won the election.


Mani . V
ஜூலை 13, 2024 15:43

ஊழல்வாதிகள் வெற்றி பெறுவது சாதாரணம்தான்.


விஜய்
ஜூலை 13, 2024 15:38

பணநாயகம் ஜெயித்து விட்டது


Mettai* Tamil
ஜூலை 13, 2024 15:23

ஆமா பணத்தை கொடுத்துட்டு பிரசாரம் செய்யணும் .......


ram
ஜூலை 13, 2024 15:22

தமிழக மக்கள் உண்மையும் சத்தியத்தையும் மதிக்கிறவங்க.. பணத்தை திணித்து சத்தியம் வாங்கி மிரட்டி ஜெயிப்பது என்பது பெரிய வெற்றிதானே.. இப்படியும் ஜெயிக்கலையினா உயிர் வாழவே தகுதியில்லைதானே..


p.s.mahadevan
ஜூலை 13, 2024 15:20

பணநாயகம் வழக்கம் போல் வென்றுவிட்டது.


KRISHNAN R
ஜூலை 13, 2024 15:12

உண்மை தான்..வேஷ பிரச்சாரம் வெற்றி


கூமூட்டை
ஜூலை 13, 2024 14:59

மக்கள் கூட்டம் சாராய மயக்கம் மாடல்


S. Narayanan
ஜூலை 13, 2024 14:53

மக்களை அடைத்து வைத்து பணம் மது கொடுத்து வாங்கியது வெற்றி இல்லை.


A Viswanathan
ஜூலை 13, 2024 19:11

தோல்வி அடைந்தாலும் இப்படியே பேசவேண்டும்.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை