உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் காவலாளியை போலீஸ் தாக்கும் வீடியோ வெளியானது: வீடியோ எடுத்தவர் பாதுகாப்பை கோர்ட் உறுதி செய்ய வேண்டும்!

கோவில் காவலாளியை போலீஸ் தாக்கும் வீடியோ வெளியானது: வீடியோ எடுத்தவர் பாதுகாப்பை கோர்ட் உறுதி செய்ய வேண்டும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை: போலீஸ் விசாரணையில் உயிரிழந்த, சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், போலீசாரால் சரமாரியாக தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வழக்கில், வீடியோ முக்கிய சாட்சியமாக கருதப்படும் என்பதால், வீடியோ எடுத்தவரின் பாதுகாப்பை கோர்ட் உறுதி செய்ய வேண்டும்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் விசாரணை கைதி அஜித் குமார் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருப்புவனம் குற்றப்பிரிவு போலீசார் பிரபு, ஆனந்தன், கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8hcysu7v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது, அஜித்குமார், போலீசாரால் சரமாரியாக தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. வீடியோவை அஜித்குமார் குடும்பத்தினர் வெளியிட்டு உள்ளனர். வீடியோவில் அஜித்குமாரை போலீசார் சுற்றி நின்று தாக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ஜன்னல் வழியாக ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி உத்தரவு

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் மரணமடைந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை திருப்புவனம் மாஜிஸ்திரேட் இன்று மாலை 3 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கையை மதுரை அரசு மருத்துவமனை டீன் இன்று மாலை 3 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, கோர்ட்டில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.இதற்கிடையே அஜித்குமாரை போலீசார் தாக்கும் வீடியோ நீதிபதிகளிடம் காண்பிக்கப்பட்டது. இந்த வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் இன்று மதியம் 3 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி அவர் இன்று கோர்ட்டில் ஆஜரானார். தான் 15 வினாடிகள் வீடியோ எடுத்ததாகவும், அதன் பிறகு பயம் காரணமாக அங்கிருந்து ஓடி விட்டதாகவும் தெரிவித்தார்.

பாதுகாப்பை உறுதி செய்யணும்!

சிவகங்கை மடப்புரம் கோவில் காவலாளி அஜித் போலீசாரால் தாக்கப்பட்ட சம்பவத்தை சக்தீஸ்வரன் என்பவர் மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ இன்று ஐகோர்ட் மதுரை கிளையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில், போலீசாருக்கு எதிரான முக்கிய சாட்சியமாக இந்த வீடியோ கருதப்படும். அதை படம் பிடித்த சக்தீஸ்வரனும் முக்கிய சாட்சியாக விசாரிக்கப்படுவார். அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டு, சக்தீஸ்வரன் பாதுகாப்பை உறுதி செய்ய கோர்ட் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

ராஜா
ஜூலை 01, 2025 23:15

காவல் துறை அதிகாரிகள் மாநில அரசை பழிவாங்க எடுத்த நடவடிக்கைகள் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி விளக்கம் , காவல் துறையின் அனைத்து பொய் அறிக்கைகளும் இதில் அடங்கும், சாத்தான் குளம் போல இருக்கு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்,


காளிங்கன்
ஜூலை 01, 2025 22:03

நகை வாங்கி விடலாம் உயிர் வாங்க முடியுமா ? பணி நீக்கம் செய்ய வேண்டும்


Venkatesh
ஜூலை 01, 2025 21:20

தெரு நாய் மற்றும் சாக்கடை பன்றி கடித்தால் திருப்பி கடிக்க முடியுமா? ஆனாலும் அந்த கூட்டத்தை பதவியில் அமர வைத்த கேடு கெட்ட கூட்டத்தை என்ன சொல்வது


ManiK
ஜூலை 01, 2025 20:50

ச்டாலீன், சேக்கர்பாபு - எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும். உங்கள் நல்லாட்சியை தொடர உடனே மேடைக்கு வரவும்!!


Ramesh Sargam
ஜூலை 01, 2025 20:32

நீதிமன்றத்துக்கு செல்லும் வழக்குகளில் நீதிமன்றம் தண்டனை விதிக்க எதிர்பார்ப்பது சாட்சி. இந்த வழக்கில் இந்த சாட்சி ஒன்றே போறும் தாக்கிய போலீஸ் அதிகாரிகளை கடுமையாக தண்டிக்க. தண்டிக்குமா நீதிமன்றம்? கேள்விக்குறிதான்.


M S RAGHUNATHAN
ஜூலை 01, 2025 16:37

Calling the person who took video to the court is atrocious. If the Court has any doubt about the veracity or genuineness of the video, it should send the video to Forensic lab or cyber crime dept to ascertain whether the video is doctored. By calling the person who took the video to court will jeopardize the safety of the life of that person . Only at the time of trial should the person be called to depose. The HC judiciary should clarify whether it is correct to call the videographer at this stage.


m.arunachalam
ஜூலை 01, 2025 16:00

அந்த குடும்பத்தினர் நகையை கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன ? . பெரிய பதவியில் உள்ளவர்கள் அழுத்தம் கொடுத்து விசாரிக்க அவசியம் என்ன ? . கோவில் விஜயம் பெருமைகளை பறைசாற்றவா ?. தெளிதல் நலம் .


ராஜா
ஜூலை 01, 2025 15:49

ஆறு கழித்தல் ஐந்து மீதம் ஒன்று என்னாச்சு ஒரு காவலர்


ram
ஜூலை 01, 2025 15:47

இந்த போலீஸ் ஆட்கள் மனித மிருகங்கள்,


Vairam
ஜூலை 01, 2025 15:33

டெஸ்ட் mment


சமீபத்திய செய்தி