உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மலைப்பாம்புடன் வீடியோ: டி.டி.எப்.வாசன் வீட்டில் வனத்துறை சோதனை

மலைப்பாம்புடன் வீடியோ: டி.டி.எப்.வாசன் வீட்டில் வனத்துறை சோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மேட்டுப்பாளையம் : காரமடை அருகே வெள்ளியங்காட்டில் உள்ள டி.டி.எப். வாசன் வீட்டில் வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் யூடியூப் புகழ் டி.டி. எப். வாசன். இவர் பைக்கை வேகமாக ஓட்டி அந்த வீடியோவை, யூடியூப்பில் வெளியிடுவார். பைக்கை வேகமாக ஓட்டி சாகசம் செய்து சர்சையில் சிக்கினார். அதே போல் அவ்வப்போது எதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.இந்நிலையில் டி.டி.எப். வாசன் சமீபத்தில் மலைப்பாம்பை கையில் வைத்துக்கொண்டு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அந்த வீடியோவில் தான் அந்த மலைப்பாம்பை உரிமம் பெற்று வளர்த்து வருவதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.இதையடுத்து சென்னை வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே, டி.டி.எப்.வாசனின் வீடு காரமடை வெள்ளியங்காட்டில் இருப்பதால். அவர் வீட்டிற்கு காரமடை வனத்துறை அதிகாரிகள் இன்று நேரில் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.இதுகுறித்து, காரமடை வனச்சரகர் ரஞ்சித் கூறுகையில், டி.டி.எப். வாசன் வீட்டில் சோதனை செய்தோம். அப்போது அவர் வீட்டில் வனத்துறையால் வளர்க்க தடை செய்யப்பட்ட விலங்குகளை வளர்த்து வருகிறாரா என்பது குறித்து சோதனை செய்தோம். ஆனால் இங்கு விலங்குகள் எதுவும் இல்லை. இது தொடர்பான விவரங்களை சென்னை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளோம்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

V வைகுண்டேஸ்வரன்
ஜன 02, 2025 21:38

தமிழ் நாட்டின் இளைய தலைமுறையில் ஒரு பாகம், தன்மானம், சுயமரியாதை, தன்னம்பிக்கை எல்லாவற்றையும் இழந்து, சில கோமாளித்தனங்கள் செய்யும் இவன் பின்னால் ஓடும் அளவிற்கு மானங்கெட்டுப் போயிருக்கிறது.


கத்தரிக்காய் வியாபாரி
ஜன 02, 2025 19:12

இது சும்மாவே இருக்காதா ?


rama adhavan
ஜன 02, 2025 19:04

நாட்டுக்கு என்ன செய்தான் இந்த கோமாளி. இவன் செய்தி எல்லாம் எதற்கு.


ديفيد رافائيل
ஜன 02, 2025 21:02

இந்த மாதிரி news போட்டா views போகும் ad நிறைய வரும் அதான் மற்றபடி மக்களுக்கு பிரயோனமகல்லை.


சம்பா
ஜன 02, 2025 18:38

வழுக்கி விழுந்தாலே சரியாகிடும்


RAMAKRISHNAN NATESAN
ஜன 02, 2025 18:29

சாரோட மன ஆரோக்கியத்தை மொதல்ல டெஸ்ட் பண்ணுங்கப்பு ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை