மற்றவர்கள் விருப்பத்துக்கு விஜய் செயல்பட முடியாது!
கட்டுமான பணிகளுக்கு மணல் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அள்ளப்படும் மணல், வெளி மாநிலங்களுக்கும் சட்ட விரோதமாக கடத்தப்படுகின்றன. அதனாலேயே, நியாயமான விலையில் சாதாரணம் மக்களுக்கு மணல் கிடைப்பதில்லை. இதை அரசு முறைப்படுத்த வேண்டும். தமிழகம் முழுதும் போதைப் பொருள்கள் நடமாட்டம் தங்கு தடையின்றி உள்ளது. மது இல்லா தமிழகம் உருவாவதன் முதல்படியாக, மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும். தி.மு.க., அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நடிகர் விஜய் தனக்கென ஒரு கட்சி துவங்கி இருக்கிறார். அவர், கட்சிக்கென ஏற்படுத்தப்பட்டிருக்கும் கொள்கை-கோட்பாடுகள் அடிப்படையில்தான் செயல்பட முடியுமே தவிர, மற்றவர்கள் விருப்பத்துக்கு செயல்பட முடியாது. நடிகர் விஜயின் த.வெ.க., எந்தக் கட்சிக்கும் பி-டீமாக செயல்பட வாய்ப்பில்லை. வாசன், தலைவர், த.மா.கா.,