உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வை மட்டும் விமர்சித்த விஜய்; அ.தி.மு.க., ஓட்டுகளை பெற அதிரடி வியூகம்

தி.மு.க.,வை மட்டும் விமர்சித்த விஜய்; அ.தி.மு.க., ஓட்டுகளை பெற அதிரடி வியூகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஈரோட்டில் நடந்த பிரசார கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று பேசினார். அதில், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கூட்டணியை விஜய் விமர்சிக்கவில்லை; தி.மு.க.,வை மட்டுமே கடுமையாக விமர்சித்தார். எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா கூறியது போல, தீய சக்தி என்று தி.மு.க.,வை விஜய் கடுமையாக சாடினார். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஆகியோரை யாரும் உரிமை கொண்டாட முடியாது; இரண்டு தலைவர்களும், அனைவருக்கும் பொதுவானவர்கள் என விஜய் உரிமை கொண்டாடினார். ஜெயலலிதாவையும் பெருமைப்படுத்தும் வகையில் பேசினார். அ.தி.மு.க.,வின் மொத்த ஓட்டுகளையும் தன் பக்கம் வளைக்கும் நோக்கிலேயே அவர் அப்படி பேசியதாக பலரும் கூறுகின்றனர். மேலும், 'களத்தில் இருப்பவர்களை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்ய முடியும்; களத்தில் இல்லாதவர்களையும், களத்துக்கு சம்பந்தம் இல்லாதவர்களையும் எதிர்க்க முடியாது' என்றார். இப்படி பேசியதன் வாயிலாக, 'தி.மு.க., - த.வெ.க., இடையில் தான் போட்டி; மற்ற கட்சிகள் களத்தில் இல்லை' என மறைமுகமாக விஜய் தெரிவித்துள்ளார். கொங்கு மண்டல மக்களின் ஓட்டுகளை கவர, காளிங்கராயனை பெருமைப்படுத்தும் வகையில் விஜய் பேசினார். அவரது பேச்சுக்கு, தி.மு.க.,வினர் உடனுக்குடன் பதிலடி தந்த நிலையில், அ.தி.மு.க.,வினர் வழக்கம் போல அடக்கி வாசிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Gopal Kadni
டிச 19, 2025 17:43

அதெல்லாம் ஒன்னும் இல்லை. இவர் திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிப்பாருங்க. ஜாக்கிரதை.


Gajageswari
டிச 19, 2025 17:24

திமுக தான் நமது எதிரி


முருகன்
டிச 19, 2025 16:03

இது தெரியாமல் ஒரு ... கூட்டம் விஜய் கூட்டணிக்கு வருவார் முதல்வர் ஆகலாம் என கணவு காண்கிறது


BHARATH
டிச 19, 2025 14:58

அடுக்கு எல்லெல்லாம் ஜோசப் சரிப்பட்டு வரமாட்டான்


BHARATH
டிச 19, 2025 14:58

அடுக்கு எல்லெல்லாம் ஜோசப் சரிப்பட்டு வரமாட்டான்


T.sthivinayagam
டிச 19, 2025 12:43

தூய வெற்றி கழகம் கொஞ்சம் கொஞ்சமாக பிளாப் ஆகிவிடுமா என்று தொண்டர்கள் பேசுகின்றனர்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 19, 2025 13:47

உங்க காமெடி மன்னரின் மாப்ளெ ஸ்பான்சர் பண்றாரே...


S.L.Narasimman
டிச 19, 2025 12:42

கருநாநிதி ஏமாற்று பேச்சிற்கே மாறாத அதிமூக தொண்டர்கள் காளான் பேச்சிற்கா ஏமாறுவார்கள்..


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 19, 2025 13:47

ஒவ்வொரு ஆடீம்கா தொண்டனுக்கும் தெரியும் .......


SIVA
டிச 19, 2025 11:13

ஆந்திராவில் கடவுளே என்று அழைக்கப்பட்ட என்டிஆர் அவர்களே சைக்கிள் சின்னம் சந்திரபாபு நாயுடு அவர்கள்பக்கம் சென்ற பின் சின்னம் இல்லாமல் அவரால் பெரிய அளவில் அரசியல் செய்ய முடியவில்லை அரசியலில் சின்னம் முக்கியம் பிகிலு ....


Kadaparai Mani
டிச 19, 2025 10:55

Aiadmk is the largest political party in Tamilnadu. Aiadmk need not repond to Kamal 2.0 version. He will quit politics after 2026.Vijay advisors are either from dmk or vck


Govi
டிச 19, 2025 09:50

வியூகம் எல்லாம் வேலைக்காது தொண்டன் மாறினால் ஒழிய உண்மை தொண்டன் ஒருக்காலும் மாற மாட்டான்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை