உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயிடம் மாற்று திட்டம் இருக்க வேண்டும்

விஜயிடம் மாற்று திட்டம் இருக்க வேண்டும்

மறுபடியும் அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, மாற்றி ஓட்டுப் போடுகிறேன் என தி.மு.க.,வுக்கு ஓட்டுப் போட்டதன் விளைவை அனுபவிக்கிறான். பிசாசை விவகாரத்துப் பண்ணி விட்டு, பேயை திருமணம் செய்து கொண்டது போல் தான் இதுவும். புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் நடிகர் விஜய், எந்த தத்துவத்துக்காக போராட வந்திருக்கிறார் என யாராவது கேட்டதுண்டா? போராடி யாரும் பார்த்ததுண்டா? விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது ஏற்படாத எழுச்சியா, இப்போது ஏற்பட்டு விட்டது? ஈ.வெ.ரா., அண்ணாதுரையை ஆதர்ஷமாக வைத்திருக்கிறேன் என்றால், அவரும் தி.மு.க.,வைத்தான் வீழ்த்தியாக வேண்டும். அண்ணாதுரையை முன்னோடியாக வைத்து, ஒருவர் போய்க் கொண்டே இருக்கிறார். அவரை வீழ்த்த வேண்டும் என்றால், கண்டிப்பாக மாற்றுத் திட்டம் இருக்க வேண்டும். அதில்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. -- சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

மணி
ஆக 06, 2025 12:01

உனக்கென்ன ராஜ ஏகபட்ட பேர மெட்டை அடிச்சாச்சு. இன்னும் பாக்கி உள்ளவர் ஐயும் மொட்டை அடி


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 06, 2025 10:32

அவரை விடுங்கள்.....உங்களிடம் என்ன திட்டங்கள் இருக்கு....மாடு மேய்ப்பதும், கள் இறங்குவதும் தானா ??? தமிழ் பேரை வைத்து அரசியல் செய்யாதீர்.....தமிழ் நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் என்னொன்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள் அதை சொல்லி வாக்கு சேகரியுங்கள் .... அடுத்தவர் கதை உங்களுக்கு வேண்டாம்.....!!!


சமீபத்திய செய்தி