உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளைய காமராஜர் பட்டம் வேண்டாம் என்கிறார் விஜய்

இளைய காமராஜர் பட்டம் வேண்டாம் என்கிறார் விஜய்

சென்னை: காமராஜர், இளைய காமராஜர் என, தன்னை அழைக்க வேண்டாம் என த.வெ.க., தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவியருக்கு, த.வெ.க., சார்பில், மூன்றாம் கட்ட விருது வழங்கும் விழா, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில், நேற்று நடந்தது. மாணவ - மாணவியருக்கு விருதுகள் வழங்கி, அவர்களின் பெற்றோர், குடும்பத்தினருடன், த.வெ.க., தலைவர் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசுகையில், “இங்கு வந்திருப்போர் மட்டுமல்ல; வராமால் இருக்கும் கட்சியினர் அனைவரும் கூட பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும். “வரும் 2026 சட்டசபை தேர்தல் குறித்தும், என்னை 'காமராஜர்', 'இளைய காமராஜர்' என பட்டம் சூட்டியும் யாரும் பேச வேண்டாம். தாங்கள் படித்த பள்ளி, ஆசிரியர்கள் குறித்து மாணவர்கள் பேசலாம்,” என்றார். விருது வழங்கும் நிகழ்ச்சிகளில், மாணவியருடன் தோள் மீது கை போட்டு வாழ்த்துவது தொடர்பாக, விஜயையும் அனுமதித்த மாணவியரையும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், விருது பெற்ற மாணவி ஒருவர், நேற்று பேசினார். அவர் பேசுகையில், “எங்களுடன் தோள் மீது கைபோட்டு விஜய் புகைப்படம் எடுப்பதை விமர்சிக்கின்றனர். விஜயை தாய் மாமனாகவும், அப்பாவாகவும், அண்ணனாகவும், உயிராகவும் பார்க்கிறோம்.“இப்படி விமர்சிப்போர் குடும்பத்தில் இருந்து யாராவது, நடிகர் விஜயுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டால், அவர்களையும் இப்படித்தான் விமர்சிப்பரா,'' என்றார்.நிகழ்ச்சியை தொடர்ந்து, பரந்துார் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் விஜயை சந்தித்து, தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக, நன்றி தெரிவித்தனர். இதுபோல, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள், விஜயை சந்தித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி, தாங்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி விஜயிடம் கேட்டுக் கொண்டனர். ''தேவையானால், உங்கள் போராட்டத்தில் நானும் பங்கேற்பேன்,'' என, விஜய் உறுதியளித்து, அவர்களை அனுப்பி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Mohdgilani
ஜூன் 14, 2025 19:08

கூத்தாடிங்க தொல்லை தாங்க முடியல. இவரெல்லாம் காமராஜர் பெயரை சொல்கிறார்.


Perumal Pillai
ஜூன் 14, 2025 15:45

எங்களுக்கு காமராஜரை தெரியாது. தெரிந்தது எல்லாம் சங்கவி மற்றும் திரிஷா மட்டுமே .


Enrum anbudan
ஜூன் 14, 2025 12:30

விளக்கமாத்துக்கு பட்டு குஞ்சமாம். தமிழன் மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டான், விஜய் இதுவரை என்ன மக்களுக்கு செய்துருக்கின்றான் என்று தெரியவில்லை.


M Ramachandran
ஜூன் 14, 2025 10:58

பிஞ்சியிலேயே பழுத்து வெம்பி விடும்


M Ramachandran
ஜூன் 14, 2025 10:57

ரொம்ப பில்டப், ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாதுய்யா விஜய், விஜய்யா ? வீ சய்யா, சினிமாவுல காட்சி வச்ச மாதிரி இருக்கே., சினிமா நடிப்பு அப்பா, மதி கெட்டவர்கள் திருந்த வேண்டும். இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலேயா. திராவிட கலாச்சாரம் இவரைய்ய தொற்றி கொண்டிருக்கு. காமராஜரைய்ய இழிவு படுத்தும் செயல்.


P.Sekaran
ஜூன் 14, 2025 10:53

கர்ம வீரர் காமராஜரை ஒப்பிட முடியாத அபூர்வமான தலைவர். அவரை யாராலையும் ஒப்பிடமுடியாத தலைவர். கடைசி வரை அப்பழுக்கற்ற தலைவர். அரசு தரும் சலுகைகளை கூட அனுபவிக்காதவர். இப்பொழுது உள்ள தலைவர்கள் அரசுக்கு செலுத்தவேண்டிய வரிகளை கூட கட்டாதவர் மத்தியில் அப்பழுக்கற்ற மனிதர் இது எல்லோருக்கும் தெரிந்த சங்கதி. இதில் இவர் என்ன சொல்வது.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 14, 2025 10:51

காங்கிரஸ்காரர்களுக்கு காமராஜரை ஞாபகப்படுத்தறார் போல இருக்கு


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 14, 2025 10:50

தினமலர் அன்பர்கள் அனைவரும் தவறாமல் முகமது பின் துக்ளக் படம் பார்க்கவும். எதை வேண்டாம் என்று ஒரு அரசியல் வாதி சொல்கிறாரோ அதுதான் வேண்டும் என்று அர்த்தம்.கலைஞர் தன்னைப் புகழ வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். கட்சிக்காரர்களுக்கு அதன் அர்த்தம் தெரிவதால் மீண்டும் மீண்டும் போட்டி போட்டுக்கொண்டு புகழ்ந்துகொண்டே இருப்பார்கள்.


GoK
ஜூன் 14, 2025 10:34

இதெல்லாம் ஒரு கட்சி, ஒரு தலைவன், தொண்டர்கள் ...நாசமா போனது தமிழகம்


KRISHNAN R
ஜூன் 14, 2025 09:03

வாங்குன வண்டிக்கு வரி காட்டமாட்டேன்னு.. கோர்ட். போனவன்... கண்றாவி ராசு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை