உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1967,1977 தேர்தல்களின் வெற்றி; 2026 தேர்தலிலும் நிகழ்த்துவோம் என்கிறார் விஜய்

1967,1977 தேர்தல்களின் வெற்றி; 2026 தேர்தலிலும் நிகழ்த்துவோம் என்கிறார் விஜய்

சென்னை: 1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம் என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் கடந்த வாரம் (செப்டம்பர் 13) தொடங்கினோம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mh18t1k9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இரண்டாவது வாரமாக, மீனவச் சொந்தங்கள் மற்றும் மும்மதங்களையும் போற்றி, மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் நாகப்பட்டினம் மாவட்ட மக்களையும், உலகுக்கே உணவூட்டும் உழவர் பெருமக்களாகிய திருவாரூர் மாவட்ட மக்களையும் நேற்று சந்தித்தோம்.

அஞ்சி நடுங்கும்…!

நம்மைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். இந்த நடுக்கத்தினாலேயே நாம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் பொழுதெல்லாம் யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை நமக்கு விதிக்கின்றனர். ஆனால், நாம் நம் கொள்கைத் தலைவர்களின் வழியில் முதன்மைச் சக்தியாக, உண்மையான மக்களாட்சியை அமைத்திட நம் பணிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம்.

அன்பும் பாசமும்

இந்த எழுச்சிமிகு தருணத்தைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி. நேற்றைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, முழு ஒத்துழைப்பு நல்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு, தன்னார்வலர்கள் குழு, தனியார் பாதுகாவலர்கள் குழு, மருத்துவக் குழு ஆகியவற்றுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன். மேலும் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மக்கள் நமக்களித்த வரவேற்பும் நம் மீது காட்டிய அன்பும் பாசமும் நிகரில்லாதவை.

வெற்றி நிச்சயம்

இவை எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கும். இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. தமிழக மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், அவர்களுக்காக எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். 1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம். புதியதோர் உலகு செய்வோம். கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம். நல்லதே நடக்கும்.வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anand
செப் 21, 2025 22:51

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது ஹா ஹா ஹா


BHARATH
செப் 21, 2025 16:16

காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா காகா


Vasan
செப் 21, 2025 15:04

Mr. Vijay, A King should fight against another King. You have d yourself as Chief Minister candidate. It is the wish of many people of Tamilnadu, that you should con in the same constituency as the other Chief Ministers, present and past, Mr.Stalin and Mr.Edapadi Palaniswamy. Please dont fight against a ordinary soldier. Even if you win against a soldier that can not be termed as victory.


Manaimaran
செப் 21, 2025 13:31

முடியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை