உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாகை, திருவாரூரில் விஜய் இன்று பிரசாரம்; மின் கம்பங்களில் ஏறத் தடை

நாகை, திருவாரூரில் விஜய் இன்று பிரசாரம்; மின் கம்பங்களில் ஏறத் தடை

சென்னை; நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்யவுள்ள நிலையில், மின் கம்பங்களில் ஏற, அக்கட்சியினருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக, வாரம்தோறும் சனிக்கிழமைகளில், பிரசாரம் செய்யும் வகையில், த.வெ.க., தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டு உள்ளது. செப்., 13ம் தேதி திருச்சி, பெரம்பலுார் மாவட்டங்களில், அவர் பிரசாரம் செய்தார். இதைதொடர்ந்து இன்று நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்யவுள்ளார். நாகப்பட்டினம், புத்துார் அண்ணாதுரை சிலை சந்திப்பு, திருவாரூர் நகராட்சி அலுவலகம் தெற்கு வீதி ஆகிய இரண்டு இடங்களில், அவர் பேசவுள்ளார். விஜய் பேசவுள்ள இடங்களில் மின் கம்பங்கள் உள்ளதால், மின் இணைப்பை துண்டிக்குமாறு, த.வெ.க., தரப்பில், மின் வாரிய அதிகாரிகளிடம் கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால், வழக்கம்போல, மின்சாரம் வழங்கப்படும் என, மின் வாரியம் அறிவித்துள்ளது. இதற்கிடையே, த.வெ.க., தொண்டர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து, அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: விஜய் பிரசாரம் செய்யவுள்ள இடத்தில் உள்ள கட்டடங்கள், மதில் சுவர்கள், மரங்கள், மின் விளக்கு கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், கொடி கம்பங்கள், சிலைகள், கிரில் கம்பிகள், தடுப்புகள் ஆகியவற்றின் மீது ஏறுவதையும், அருகில் செல்வதையும் தொண்டர்கள் தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக உயரமான இடங்களில் மேலே ஏறக்கூடாது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், பிளக்ஸ் பேனர், அலங்கார வளைவுகள், கொடி கட்டப்பட்ட கம்பிகளை உரிய அனுமதி பெறாமல் வைக்கக்கூடாது. பட்டாசு வெடித்து வரவேற்பு அளிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

ஐந்து துணை பொ.செ.,க்கள்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை: த.வெ.க., இணை பொதுச்செயலர் மற்றும் தலைமை முதன்மை செய்தி தொடர்பாளராக நிர்மல்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலுாரைச் சேர்ந்த ராஜ்மோகன், நாமக்கலைச் சேர்ந்த விஜயலட்சுமி, சென்னையைச் சேர்ந்த அருள் பிரகாசம், திருநெல்வேலியைச் சேர்ந்த ஸ்ரீதரன், துாத்துக்குடியைச் சேர்ந்த சுபத்ரா ஆகியோர் துணை பொதுச்செயலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

R.MURALIKRISHNAN
செப் 20, 2025 14:39

வாரத்துக்கு ஒரு தடவ பொழுதுபோவதற்கும், வீட்டில் இருப்பதற்கும் லீவு தருகிறார்கள். இந்த டுபாக்கூர் நடிகன் பொழுது போவதற்கு சனிகிழமை ஊர் கற்றுகிறான் கேரவனில். சோம்பேறிகளும் ஊர் சுற்றிகளும் இவனுடன். மக்களுடன் இணைந்து போராளியாக உள்ளவர்களை தேர்ந்தெடுங்கள். சினிமா நடிகனை நம்பி தமிழகத்தை நாசமாக்காதீர்கள். இந்த நடிகனை நம்பாதே


Madras Madra
செப் 20, 2025 12:24

என்ன தடை இது ? குரங்களுக்கா மாநாடு நடக்குது


தமிழ்வேள்
செப் 20, 2025 10:43

மதத்துக்கு ஆள்பிடிக்கும், கையோடு ஆட்சிக்கும் குறி வைக்கும் பிராஜெக்ட் இது... ஆனால் சிக்குவது என்னவோ வானரங்கள் மட்டுமே... தொட்டபெட்டா ரோட்டுக்கு தான் போகணும் போல...


Moorthy
செப் 20, 2025 10:12

தற்போது தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தி ஒன்றை மக்கள் விரும்புவதை விஜய்க்கு கூடும் கூட்டம் மூலம் உணர முடிகிறது இன்றைய நிலையில் காசு கொடுக்காமல் கூட்டம் கூடும் ஒரே கட்சி த வெ க தான் மாற்றத்தை நோக்கி தமிழகம்


angbu ganesh
செப் 20, 2025 09:44

குரங்கில் இருந்து பிறந்தான் மனிதன் சரிதானே அதனை வழி நடத்துவது ஒரு காக்காவா


c.k.sundar rao
செப் 20, 2025 09:29

He his fans and cadres are indisciplined and have no morality how to behave in public forum.


திகழ்ஓவியன்
செப் 20, 2025 09:19

சார் வருகிறார் ELCY எல்லாம் CUT பண்ணி வையுங்க பாவம் , இவங்க தொண்டர்களுக்காக அந்த ஏரியா ஆள் எல்லாம் ELCY இல்லாம கஷ்ட படனும் இவருக்கு அரசியல் ஆலோசகர் யார் என்று தெரியல


Raman
செப் 20, 2025 10:09

Who else.. your group must be ..looking at the acts..


Moorthy
செப் 20, 2025 08:46

வாரம் ஒரு நாள் பிரசாரத்துக்கே , த வெ க வுக்கு மூச்சு வாங்குது...சரியான பயண திட்டமிடல் இல்லை இன்றும் பயண திட்டம் மற்றும் நேரத்தில் பெரும் குழப்பங்கள் வரலாம். காலை 11 மணிக்கு நாகை ப்ரொக்ராம் ஆனால் தற்போதைய நிலையில் பகல் 1 மணிக்குத்தான் விஜய் நாகை சென்றடைவார் மழை வேறு பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று


Palanisamy Sekar
செப் 20, 2025 07:57

எல்லா கட்சிகளும் அவர்களது நோக்கங்களை பற்றி தெளிவாக அக்கட்சி உறுப்பினர்களுக்கு தெரிவிப்பது என்பது உலக நடைமுறை வழக்கம். ஆனால் இங்கே பாருங்கள், சொந்த கட்சி ரசிகர்களுக்கு அதுலே ஏறாத இதுல ஏறாதன்னு சொல்வதை கேட்கும்போது தமிழக அரசியலை நினைத்து சிரிப்பதா நொந்துகொள்வதா என்று புரியவில்லை. இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்லாமல் விட்டுவிட்டார் விஜய். உட்காருகின்ற சேரை உடைக்காமல் போகவும் என்று சொல்ல மறந்துவிட்டார். அதையும் தூக்கிக்கொண்டு செல்லாதீர்கள் என்றும் சொல்லி இருக்கலாம். திருமாவளவன் கூட இப்படித்தான் சொந்த கட்சியினரிடம் கெஞ்சினார்.. கூட்டம் முடிந்து போகும்போது இரும்பு கம்பிகளை பிடுங்கி கொண்டு போகாதீங்க..அதற்கும் சேர்த்து பணம் கேட்கின்றார்கள் என்று புலம்பினார். இப்படியா ஒவ்வொர் கட்சியிலும் இருப்பாங்க. தமிழ்நாட்டு அரசியலில் கோமாளிகள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது.


Svs Yaadum oore
செப் 20, 2025 07:52

ஊரில் ஒருத்தன் இறந்து போனால் ஊர் மக்கள் கூடி துக்கம் அஞ்சலி ஊறவினருக்கு ஆறுதல் என்று அடக்கம் செய்வார்கள் ...இது குடும்பத்தினர் சொந்த விஷயம்.... .இதைக் கூட நேற்று சினிமாவாக மாற்றி டிவி TRP உயர்த்தனும் என்று சாவைக்கூட நாடகமாக மாற்றி கேவலமாக திராவிட நாடகம் ....இதையும் உட்கார்ந்து பார்க்கும் திராவிட சினிமா டிவி பைத்தியங்கள்....


திகழ்ஓவியன்
செப் 20, 2025 09:22

தமிழநாட்டை கலிபோர்னியா உடன் COMPARE பண்ண சொன்னார் வேறு எந்த பிஜேபி ஆளும் மாநிலம் TN REACH ஆக 50 வருடம் ஆகும் என்கிறார் , உமக்கு புரட்டாசி முதல் வெள்ளி என்று அலறல்


angbu ganesh
செப் 20, 2025 09:46

எல்லாமே கேவலமான விளம்பரம் பணத்திற்காக என்ன வேணா பண்ணுவானுங்க


Raman
செப் 20, 2025 10:11

No jobs..looks like


திகழ்ஓவியன்
செப் 20, 2025 12:03

thank you since you become a follower how much i have pay for this sacrifice job


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை