உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க., மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார்; போலீசின் 42 கேள்விகளுக்கு பதில்

த.வெ.க., மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார்; போலீசின் 42 கேள்விகளுக்கு பதில்

மதுரை : 'தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில், கட்சி தலைவரான விஜய் மட்டுமே பேசுவார் என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை பாரபத்தி பகுதியில் த.ெவ.க., மாநாடு நடத்தப்படுகிறது. வரும் 21ம் தேதி நடைபெறும் மாநாட்டுக்கான பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. இதற்கிடையே, மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக, போலீஸ் தரப்பில் 42 கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு, கட்சியின் பொதுச் செயலர் ஆனந்த் நேற்று பதிலளித்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது: ஆக., 21 மதியம் 3:15 முதல் இரவு 7:00 மணி வரை மாநாடு நடைபெறும். த.வெ.க., மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் தவிர, வேறு முக்கிய நபர்கள் யாரும் பங்கேற்கவில்லை; அவர் மட்டுமே பேசுவார். மதுரை விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடக்கும் இடம் வரை, அவருக்கு எந்த வரவேற்பும் அளிக்கப்படாது. மாநாட்டில் கர்ப்பிணியர், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. ௧.50 லட்சம் பேர் வரை பங்கேற்பர். மூன்று இடங்களில் 'பார்க்கிங்' வசதி செய்யப்படுகிறது. தொண்டர்கள் வந்து செல்ல 18 வழிகள் அமைக்கப் படுகின்றன. மாநாடு பகுதி முழுதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இவ்வாறு கூறப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

R.MURALIKRISHNAN
ஆக 09, 2025 18:56

அதுவும் யாரோ எழுதி கொடுத்ததை மட்டும் பேசுவார் இந்த திமுகவின் கை கூலி


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 09, 2025 13:08

எதற்காக இத்தனை கெடுபிடி....மற்ற கட்சிகள் மாநாடு நடத்த வில்லையா..... அவர்களுக்கும் இந்த மாதிரியான கட்டுபாடுகள் விதித்தனரா ??? விதித்ததாக செய்திகள் இல்லையே.... மாநாடு நடத்த அனைத்து கட்சிகளுக்கும் உரிமை இருக்கும் போது போலிஸின் அனுமதி எதற்கு..... போலிஸ் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கலாமே தவிர அனுமதிக்காக கோரிக்கை எதற்கு??? பாதுகாப்பு அளிக்கவேண்டுமே தவிர இப்படித்தான் நடத்த வேண்டும் என்று எப்படி உத்தரவு போடமுடியும்..... ஆளுங்கட்சி மாநாடுகளுக்கும் இப்படித்தான் கட்டுபாடுகள் விதித்து உத்தரவு போடுகிளார்களா ??? ஒன்று மட்டும் புரிகிறது நீதிமன்றம் போலிஸ்துறை எல்லாம் மக்களுக்கானது அல்ல அது ஆளும் கட்சியின் ஏவலாள்.....இப்படியே நீடித்தால் பொதுமக்களே நியாத்திற்காக சட்டத்தை கையிலெடுக்க தயங்க மாட்டார்கள் பிறகு போலிஸுக்கும் நீதிமன்றத்திற்கும் என்ன வேலை இருக்க போகிறது..... !!!


panneer selvam
ஆக 09, 2025 15:54

As a safety protocol , these questions are asked to everyone , even if you conduct a conference in a public place . Some parties are exempted like communists , Vaiko, Velmurugan etc since they do not get not more than 1,000 participants.


Ramesh Sargam
ஆக 09, 2025 12:50

மாநாடு முடிந்தவுடன் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு போவீர்களா என்கிற கேள்வியை முதலில் கேளுங்கள்.


angbu ganesh
ஆக 09, 2025 09:32

இருக்கற பிரச்சினைகள் போதாதுன்னு இவன் வேற


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை