உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 7 மணி நேரம் விஜய் தாமதமாக வந்ததே நெரிசலுக்கு காரணம்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

7 மணி நேரம் விஜய் தாமதமாக வந்ததே நெரிசலுக்கு காரணம்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: கூட்டம் நடந்த இடத்திற்கு தவெக தலைவர் 7 மணி நேரம் கழித்து தான் வந்தார். இந்த காலதாமதம் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என சட்டசபை முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.கரூர் சம்பவம் தொடர்பாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கரூர் துயரச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதையும் உலுக்கியது. இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். கடந்த செப்.27ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவரின் அரசியல் நிகழ்ச்சி நடைபெற்றது. அக்கட்சியின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் இதற்கான அனுமதியைக் கோரி இருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2pavl499&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அனுமதி

அவர் அனுமதி கோரிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும், பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படும் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களாலும் அனுமதி வழங்கப்படவில்லை. செப்.25ம் தேதி காலை லைட்ஹவுஸ் கார்னர் அல்லது உழவர் சந்தைப் பகுதியில் அனுமதி கோரிய மனுவுக்கும், கூட்ட அளவு மதிப்பீடு மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்க இயலவில்லை. பின்பு, செப். 25ம் தேதி அன்று அக்கட்சியின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர், வேலுசாமிபுரத்தில் 27ம் தேதி அன்று மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி கோரினார். மனு ஏற்கப்பட்டு, 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடு

தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கேட்டதால் வேலுச்சாமி புரத்தில் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. 3 கூடுதல் மற்றும் 5 துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 517 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால் பல இடங்களில் அனுமதி வழங்கவில்லை. செப். 27ம் தேதி அக்கட்சியின் தலைவர் சென்னையில் இருந்து காலை 8.40 மணிக்குப் புறப்பட்டு 9.25 மணிக்கு திருச்சி வந்தடைந்தார். அதன் பின்னர் நாமக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு, கரூருக்கு இரவு 7 மணிக்கு வந்துள்ளார்.

காரணம் இதுதான்!

அதாவது அறிவிக்கப்பட்ட 12 மணிக்குப் பதிலாக 7 மணி நேரம் கழித்து தான் வந்தார். இந்த காலதாமதம் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மக்களுக்கு உணவு தண்ணீர் உட்பட எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. பிரசார வாகனத்தை நிறுத்த கரூர் மாவட்ட எஸ்பி பலமுறை கூறியும், அதை நிறுத்தாமல் சென்றனர். போலீசாரின் அறிவுறுத்தலை மீறி, 35 மீட்டர் தூரம் வரை விஜய் வாகனம் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. மீட்பு பணிகள் நடந்துக் கொண்டிருக்கும் போதே 2 ஆம்புலன்ஸ் டிரைவர்களை தவெகவினர் தாக்கினார்கள்.

உடற்கூராய்வு

கூட்டம் நடத்தும் கட்சிகள் பொறுப்போடு செயல்பட வேண்டும். கரூர் கூட்ட நெரிசல் போல இனிமேல் நடைபெற கூடாது. கட்டுப்பாடுகளை மீறும் போது, பாதிக்கப்படுவது தொண்டர்கள் தான். கரூர் துயரம் அறிந்ததும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. உடனடியாக இரவோடு இரவாக கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினேன். அனைத்து உடல்களையும் வைக்க போதிய குளிர்சாதன வசதி இல்லாததால் இரவோடு இரவாக உடற்கூராய்வு செய்யப்பட்டது. இறந்தவர்களின் உடல்களை உடற்கூராய்வு செய்யும் பணி நள்ளிரவு 1.41 மணிக்கு தொடங்கப்பட்டது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இபிஎஸ் அடுக்கடுக்கான கேள்வி

கரூர் சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் பேசியதாவது: அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் துயர சம்பவத்தைத் தடுத்திருக்கலாம். நெரிசலைக் காரணம் காட்டி வேலுச்சாமிபுரத்தில் அதிமுக.,வுக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால், தவெகவுக்கு அனுமதி வழங்கியது ஏன்? ஒரே இரவில் 39 உடலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது எப்படி? அவசரம் காட்டியது ஏன்? எதிர்க்கட்சியினர் பேசிய பிறகு முதல்வர் பேச வேண்டும். ஆனால் சட்டசபையில் எல்லாம் தலைகீழாக நடக்கிறது. கரூர் விவகாரத்தில் முதல்வர் கூறியதற்கும், சட்ட ஒழுங்கு ஏடிஜிபி கூறியதற்கும் முரண்பாடு உள்ளது. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

அதிமுக வெளிநடப்பு

சட்டசபைக்குள் சபாநாயகர் முன் அமர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இருக்கைக்கு சென்று அமருங்கள் இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார். பின்னர், அதிமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தனிநபரை பலிகடா ஆக்குவது நோக்கமல்ல

சென்னை: கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை; கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது.இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்!, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 52 )

Modisha
அக் 15, 2025 18:41

கூட்டம் அதிகமானதே கூட்ட நெரிசலுக்கு காரணம் … ஆக , ஆக , ஆக , இந்த அரசு நாசமா போக .


D.Ambujavalli
அக் 15, 2025 18:33

இவர்களின் சாதாரண கவுன்சிலர், மாவட்ட நிர்வாகி கூட குறித்த நேரத்துக்கு வந்ததாக சரித்திரம் உள்ளதா? அதிமுக கூட்டத்தைவிட பிரபல நடிகருக்கு கூட்டம் சேரும் என்பது கூடத் தெரியாதா? கூட்ட நேரம் 3 முதல் 10 மணிவரை எனில் அவர் 12 மணிக்கே வந்து நிற்பாரா?


M Ramachandran
அக் 15, 2025 18:26

ஆஹா நல்ல கண்டு பிடிப்பு /சமாளிப்பு. இதை CBI சரிபார்ப்பார்கள். அப்பொடில்லிப்பயணம் நிச்சயம் தமிழ் நாடு கெஸ்ட் ஹவுசில் ரூம் போட வேண்டும்.


M Ramachandran
அக் 15, 2025 18:23

அருமை பேஷ் நல்ல கண்டுபிடிப்பு. அமாம் சுப்ரீம் கோர்ட் இறந்து அந்த 41 பாடிகளை 2 மணி நேரத்தில் எப்படி போராஸ்ட் மார்டம் செய்ய முடிந்தது கேட்டரே அது உங்க அப்பா உருட்டிய ஒரு குடமுருட்டி கதை போன்று தானா?


duruvasar
அக் 15, 2025 18:15

ஒரு 5 மணி நேரம் என்றால் ஓகேவாக இருந்திருக்குமோ தலைவா ?


spr
அக் 15, 2025 18:05

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் கூட்டம் இரவு 8.30 மணிக்குத் தொடங்குவதாக இருந்தது இரவு 10.10 க்குத்தான் நடந்தது 10.20 க்கு குண்டு வெடித்தது அங்கே கூட்டம் நடந்த இடம் பொட்டல் காடு மருத்துவ மனைகள் அருகில் இல்லைஅவை எதுவும் குறை சொல்லப்படவில்லை காவற்துறை செயல்பாடு கூட குறை சொல்லப்படவில்லை என்று சொல்லப்படுகிறது இங்கே விஜய் வந்த நேரம் மட்டுமே தொடர்ந்து விவாதப் பொருளாகிறது திமுக அதை விடுத்து வேறேதேனும் சொல்ல முயன்றால் வழக்கு நிலைக்கும் நள்ளிரவு 1 மணிக்கு மேல் தொடங்கி இரவோடிரவாக பிரேதப் பரிசோதனை நடந்து, உடனடியாக காலையில் எரித்த நிகழ்வே இப்பொழுது மிகப் பெரிய சந்தேகம் தருகிற ஒன்று இதன் காரணம் என்ன


வாய்மையே வெல்லும்
அக் 15, 2025 18:02

விஜய் லேட்டா வந்தது யாருக்கு லாபமோ நஷ்டமோ ஆனா கைக்கூலி வாங்கி அப்பாவி நாற்பது பொதுசன ஆள இருட்டில் போட்டு தள்ளிய கேப்மாரி அடி ஆட்களுக்கு கொஞ்சம்கூட ஈவு இரக்கம் இல்ல. இது மிக துயரமான நெருக்கடி நேரம். இதற்கு யார் சார் பொறுப்பேற்பது ..? விடியல் சார் உங்களை பார்த்து தான் கேள்வி ?


Muthuraj
அக் 15, 2025 16:52

அரசாங்கம், காவல் துறை பிரச்சனை என்று நினைத்தால் நிகழ்ச்சியை ரத்து செய்தாவது மக்களை காப்பாற்றி இருக்கவேண்டும்.. பொறுப்பின்றி பழி போடுவது அழகல்ல... மக்கள் மனம் கொண்டு நல்ல தலைவர்கலை தேர்ந்தெடுப்பர்


என்றும் இந்தியன்
அக் 15, 2025 16:25

தன்னிடம் உள்ள தவறை மூடி மறைக்க உபயோகிக்கும் ஒரே ஆயுதம் நீ தவறு நீ தவறு நீ தவறு என்னும் வார்த்தை தான்


Rajasekar Jayaraman
அக் 15, 2025 16:23

இதர்க்கு சுப்ரீம் கோர்ட் முடிவு சொல்லும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை