உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விசில் சின்னம் கோரி விஜயின் தவெக தேர்தல் கமிஷனில் மனு

விசில் சின்னம் கோரி விஜயின் தவெக தேர்தல் கமிஷனில் மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட விசில் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரி நடிகர் விஜயின் தவெக தேர்தல் கமிஷனில் மனு அளித்துள்ளது. புதியதாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு சின்னம் எதன் அடிப்படையில் வழங்கப்படும் என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல்.தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை தொடங்கி, மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், தனது முதல் தேர்தலுக்குத் தயாராகி வரும் நடிகர் விஜயின் தவெக, தேர்தலில் போட்டியிட விசில் சின்னத்தைக் கோரி இந்திய தேர்தல் கமிஷனை அணுகியுள்ளது. தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், 1968ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் ஆணைப்படி, புதுடில்லியில் உள்ள தேர்தல் கமிஷனிடம், விசில், ஆட்டோரிக்ஷா மற்றும் மைக்ரோபோன் உள்ளிட்ட 10 சின்னங்களின் பட்டியலுடன் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தார். விருப்பத்தேர்வு சின்னங்களின் பட்டியலில் முதலிடத்தில் விசில் சின்னம் உள்ளது.அவர்கள் முன்னுரிமை பட்டியலில் கொடுத்துள்ள 10 சின்னங்களில் ஏழு சின்னம் புதிதாக பதிவுசெய்யப்பட்ட கட்சிகளுக்குக் கிடைக்கும் இலவச சின்னங்களின் பட்டியலில் உள்ளன என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பொதுவான சின்னங்கள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றன. இது குறித்து அரசியல் ஆய்வாளர்கள் கூறியதாவது: சுவர்களில் வரைவது எளிதாகவும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தெளிவாகத் தெரியும் வகையிலும் சின்னம் ஒதுக்கப்படுவது வழக்கம். வேட்பாளர் பெயர்களைப் போலவே சின்னங்களும் முக்கியம். வடிவமைப்பின் எளிமை மற்றும் தெளிவுத்திறன், வாக்காளர் மத்தியில் முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

விசில் பின்னணி என்ன?

கடந்த 2019ம் ஆண்டு விஜய் நடிப்பில் தமிழ் படம் 'பிகில்' வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இருந்தது. அதேநேரத்தில், இந்த படம் தெலுங்கில் விசில் என்ற பெயரில் வெளியாகி இருந்தது. அதேபோல், கடந்த 2024ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்தில், 'சத்தம் பத்தாது விசில்போடு' என்ற பாடல் இடம்பெற்று இருந்தது. விசில் சின்னத்தை மக்கள் மத்தியில் எளிதில் கொண்டு செல்ல முடியும் என தவெக தலைவர் விஜய் கருதுகிறார். இதுவே விஜயின் தவெக விசில் சின்னம் கோரி இருப்பதற்கு பின்னணியாக கருதப்படுகிறது.

சின்னங்கள் பெறுவது எப்படி?

அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்கு தேர்தல் கமிஷன் தயாரித்து வைத்துள்ள பட்டியலில் இருந்து ஒதுக்கப்படும்.

சட்ட விதி

* புதிய பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிட பொதுவான சின்னங்களை தேர்தல் கமிஷனிடம் மனு அளித்து பெறலாம்.* தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கோரிக்கைகளை ஆய்வு செய்வார்கள். ஏற்கனவே கட்சிகளுக்கு வழங்கப்பட்ட சின்னங்களை நகலெடுப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தேவைப்பட்டால் விளக்கங்களை கேட்பார்கள்.* தேர்தல் அறிவிப்புக்கு முன், சரிபார்ப்புக்குப் பிறகு, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சின்னங்கள் ஒதுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Easwar Kamal
நவ 14, 2025 17:26

இவன் கட்சிக்கு விசில் இல்லை சங்கு கொடுங்க பண்ண வேலையுக்கு அதுதான் சரியாய் இருக்கும்.


பேசும் தமிழன்
நவ 13, 2025 08:12

விசிலடிச்சான் குஞ்சுக்கள் என்பது அப்போது தான் சரியாக இருக்கும்.. தேர்தலுக்கு பிறகு இவர்களை யாரும் சீண்ட மாட்டார்கள்.


Matt P
நவ 12, 2025 22:34

ஒரு நடிகர் கை விளக்கை தூக்கினார், அதை அணைச்சிட்டாரு. இவரு விசிலை தூக்கிறாரு. எவ்வளவு நேரம் தான் வூதுவாரு. அதுவும் அடங்கினாலும் அடங்கிரும்.


Keshavan.J
நவ 12, 2025 21:07

அவருடைய ரசிகர்கள் படம் பார்த்து என்ன செய்வார்களோ அது போல் சின்னம். எல்லாம் தலை எழுத்து


சிட்டுக்குருவி
நவ 12, 2025 18:51

விஜய் முதல்வராகவேண்டும் என்று ஆசைப்படுவதில்லை எந்த தவறுமில்லை .தமிழகத்தில் பிறந்த எந்த ஒரு தனிமனிதனுக்குமுள்ள உரிமைதான் அது .ஆனால் அதற்க்கு ஏற்ற சக்தி நம்மிடமுள்ளதா என்பதை உறுதிபட தெரிந்துகொள்ளவேண்டும் .விஜய் முதல்வராவதை அவர்களின் தொண்டர்கள் ஆர்வமுடன் இருப்பதைப்போல தொண்டனும் அல்லாத நானும் ஆர்வமுடன்தான் இருக்கின்றேன் .இப்போதுவரைநடந்தவைகளை பார்க்கும்போது அதுசாத்தியமா என்பதுதான் கேள்விக்குறி .ஏன் என்றால் விஜய்க்கு கூட்டம் கூடுவதைவைத்தே அதை நிர்மாணிக்கமுடியாது .விஜய்யே 234 தொகுதிகளிலும் போட்டியிட்டால் விஜய் கண்டிப்பாக ஜெயிக்கலாம் ,முதல்வராகலாம் .ஆனாலது சாத்தியமில்லை .கட்சியில் உள்ள மற்றவர்காளுக்கும் அதே ஆதரவை மக்கள் கொடுப்பார்களா என்றுதான் கணிக்கவேண்டும் .அதற்க்கு என செய்யவேண்டுமென்றால் தமிழக வெற்றிகழக கட்சி கூட்டங்களை விஜய் அல்லாமல் தேர்தலில் போட்டியிடத்தகுதி உள்ளவர்களை வைத்து அவரவர் தொகுதிகளில் நடத்தி அதற்கும் கூட்டம் வருகின்றதா என்று கணிக்கவேண்டும் .விஜய்க்காகவே எல்லா தொகுதிகளிலும் வாக்காளிப்பார்களா என்பது சந்தேகமே .இதை கணித்த பிறகு திராவிடத்தை வீழ்த்தமுடியுமா இல்லையா என்பது தெரிந்துவிடும் .அதற்கப்புறம் AIADMK உடன் கூட்டு வைக்கலாமா இல்லையா என்ற முடிவெடுக்கலாம் .முடிவு DMK வை வீழ்த்துவதாக இருக்கவேண்டும் .சந்தர்ப்பத்தை விட்டுவிட்டு வருத்தப்படக்கூடாது .


Arul Jeevaraj
நவ 12, 2025 17:28

அதிக சப்தம் எழுப்பும் எந்த சின்னமும் யாருக்கும் தரக்கூடாது. விசில் சின்னம் தரப்பட்டால் TVK கட்சியினர் விசில் சத்தம் எழுப்பி மக்களை புரட்டி எடுத்து விடுவார்கள்.


saravan
நவ 12, 2025 16:06

அப்போ விசில் அடிச்சான் அணில் குஞ்சுகள்.


Shekar
நவ 12, 2025 15:50

புலி சின்னம் வாங்கலமே, அதுவும் இந்த விசய் நடித்த படம்தானே. விசில் சின்னம் கொடுத்தால் நம் காதுகள் க்ளோஸ். புலின்னா, புலி வேசம் போட்டு ஆடலாம், கர் கர் ன்னு கத்தலாம், அவ்வளவு தொந்தரவு இல்லை. ரிசல்ட் அந்த படம் போல் ஊதிக்கவும் செய்யும்.


Balasubramanian
நவ 12, 2025 14:08

விசில் அடிசசான் குஞ்சுகளுக்கு சரி! பெண்கள் விரும்ப மாட்டார்களே? அவர்கள் ஓட்டு இல்லாவிட்டால்?


Nalla
நவ 12, 2025 13:36

தற்குறிகளுக்கு விசில் சின்னம் தரக்கூடாது, வாயில் வைத்து விசில் அடித்துக் கொண்டே இருப்பார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை