| ADDED : நவ 06, 2025 02:56 PM
கப்பலோட்டிய தமிழர், வ.உ.சிதம்பரனார் நினைவு நாள், (நவ-18) குருபூஜை விழாவாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவிற்காக மதுரையிலிருந்து அணையா ஜோதி ஊர்வலம் செல்ல உள்ளதாக, 'எய்ம்பா' அமைப்பின் தலைவர் ஓம் சக்தி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளனர். வ.உ.சி.,யின் 89வது நினைவு நாளை ஒட்டி, அவர் பிறந்த ஓட்டப்பிடாரத்தில் அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் அமைப்பு (எய்ம்பா) சார்பில் இவ்விழா நடக்கிறது.குருபூஜைக்கான பந்தல் கால்கோள் விழாவில் அமைப்புச் செயலாளர் வேலம்மாள், ஒருங்கிணைப்பாளர் கண்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.விழாவுக்கு இரு நாட்கள் முன்னதாக மதுரை, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து அணையா ஜோதி ஊர்வலம் கிளம்பி, வ.உ.சி, நினைவு நாளன்று, அவர் பிறந்த நினைவிடத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு சேர்க்கப்பட உள்ளது. அப்போது, 10 ஆயிரம் ரோஜாக்களைக் கொண்டு நினைவஞ்சலியும் செய்யப்பட உள்ளது.