உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்வமாக தி.மு.க.,வில் இணையும் வாக்காளர்கள்

ஆர்வமாக தி.மு.க.,வில் இணையும் வாக்காளர்கள்

தி.மு.க., தொண்டர்களோடு பூத் கமிட்டியினர் இணைந்து வீடு வீடாக செல்கிறோம். ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து, மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய உரிமைகளை வழங்காமல் இருப்பது பற்றி தெரிவிக்கிறோம். பின், உறுப்பினராக வேண்டும் என வாக்காளர்களிடம் கேட்கிறோம். வாக்காளர்களை தி.மு.க., உறுப்பினராக்குவது அரசியல் நோக்கத்துக்காக அல்ல. தமிழகத்தின் வளர்ச்சிக்காக என்பதையும் அவர்களிடம் தெரிவிக்கிறோம். பலர் ஆர்வமாக தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். எதிர்பார்த்ததை காட்டிலும், ஓரணியில் தமிழக பிரசாரத்துக்கு கூடுதல் வரவேற்பு உள்ளது. - முத்துசாமி,தி.மு.க., அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 04, 2025 07:03

இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமல்ல ..அமெரிக்கா , ஐரோப்பா கண்டத்திலுள்ள நாடுகள், சீனா, ஆப்ரிக்காவில் உள்ள நாடுகளில் வசிக்கும் பெரும்பாலான வெளிநாட்டினரும் ஆர்வமுடன் திமுகவில் இணைகிறார்கள் ..ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் இப்போதே வாக்கு சாவடி எங்கிருக்கிறது என்று கேட்டு வாக்களிக்க வரிசையில் நிற்கின்றனர் ..


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 04, 2025 21:08

பக்கிரி..... ஆனாலும் உனக்கு இவ்வளவு குசும்பு ஆகாதையா....