மேலும் செய்திகள்
நீர் நிலைகளை அழித்து ஏர்போர்ட் தேவையா?: மக்கள் கேள்வி
29-Aug-2024 | 1
சென்னை:வாலாஜாப்பேட்டை - ராணிப்பேட்டை வழியாக, ஆந்திரா செல்வதற்கு புதிய சாலை அமைக்கும் பணியை, 10 ஆண்டுகளுக்கு பின் துவங்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தயாராகி வருகிறது.ராணிப்பேட்டை மாவட்டத்தில், 'சிப்காட்' தொழிற்பூங்கா, மத்திய அரசின் 'பெல்' நிறுவனம் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தின் வர்த்தக போக்குவரத்துக்காக, வாலாஜா பேட்டை - ராணிபேட்டை வழியாக ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்ட எல்லை வரை, 28 கி.மீ., நான்கு வழிச் சாலை அமைக்க, 2010ல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது. இதற்காக, 980 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இரண்டு முறை ஒப்பந்ததாரர் தேர்வு அறிவிக்கப்பட்டு, ரத்து செய்யப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், இந்த சாலையை அமைத்து தர வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம், தமிழக நெடுஞ்சாலைத் துறை தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டது. இதற்காக, 177 ஏக்கர் பட்டா நிலங்களும், தமிழக அரசால் கையகப்படுத்தி தரப்பட்டு உள்ளன. ஆனால், சாலை பணிகள் துவங்கப்படவில்லை. இந்த சாலையின் அவசியம் குறித்து, டில்லியில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் வலியுறுத்தினார். அதையடுத்து அவர், சாலை பணியை துவங்க, மத்திய அரசிடம் அனுமதி பெற்று தந்தார். இப்பணிக்கு 1,100 கோடி ரூபாயையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது. இதன் வாயிலாக, 14 ஆண்டுகளுக்கு பின், இந்த சாலை திட்டம் புத்துயிர் பெற்றுள்ளது.இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு ஒதுக்கியுள்ள 1,100 கோடி ரூபாயில், நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடாக, 300 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பாலாற்றின் குறுக்கே, கனரக வாகனங்கள் செல்லும் வகையில் பிரமாண்டமான மேம்பாலம் கட்டப்பட உள்ளது. மேலும், 10 கி.மீ.,க்கு பைபாஸ் சாலையும் அமைக்கப்பட உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு இருப்பதால், சாலை பணிகளை அடுத்தாண்டு ஜனவரிக்குள் துவங்க திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
29-Aug-2024 | 1