உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால்...: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால்...: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' நாளை ( ஜூலை 09) நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' னெ தமிழக அரசு எச்சரித்துள்ளது.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச சம்பள உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாள விரோத சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ( ஜூலை 9 ) பொது வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l30qpvny&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில், தி.முக.,வின் தொ.மு.ச., இடதுசாரிகளின் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மக்களை பாதிக்காத வகையில், போககுவரத்து சேவை உள்ளிட்டவை வழக்கம் போல் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், இந்த பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச்செயலர் எச்சரித்துள்ளார். சம்பள நிறுத்தம், துறைரீதியான நடவடிக்கை என ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத்தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தாமரை மலர்கிறது
ஜூலை 09, 2025 00:27

இந்த கம்யூனிஸ்ட் போராட்டக்காரர்களை நக்சலைட் தீவிரவாதிகள் போன்று இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இவர்கள் சொல்கிறபடி சம்பளம் கொடுத்தால், ஒரே நாளில் நாடு திவாலாகிவிடும். அரசு ஊழியர்கள் அதிகப்படியான பேராசைகொண்டவர்கள். ஏற்கனவே சம்பளத்தை விட மூன்றுமடங்கு கிம்பளம் வாங்கி ஒவ்வொரு அரசு ஊழியரும் மூன்று வீடுகளுக்கு மேல் வைத்திருக்கிறார்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 08, 2025 17:10

நாங்கள் எதிர்கட்சியாய் இருந்தால் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது உங்கள் கடமை , உங்களது உரிமை .நாங்கள் ஆளும் கட்சியாகிவிட்டால் , உங்களுக்கு எச்சரிக்கை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை