மேலும் செய்திகள்
ரூ.3 லட்சத்துக்கு புங்கனுார் காளை மாடு
2 minutes ago
அரசு மருத்துவமனைகளில் ‛தியாகச்சுவர் அமைகிறது
15 minutes ago
வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்கி அட்டூழியம்
23 minutes ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் போலீசில் தொடரப்பட்ட போக்சோ வழக்கில் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாத மதுரை திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் முருகனுக்கு பிடி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.கோவிலாங்குளம் பகுதியில் சிறுமியை கடத்தியது தொடர்பான போக்சோ வழக்கு 2021ல் போலீசில் பதிவு செய்யப்பட்டது. அப்போதைய பெருநாழி இன்ஸ்பெக்டர் முருகன் விசாரணை அதிகாரியாக இருந்தார். தற்போது அவர் திருப்பரங்குன்றம் ஸ்டேஷனில் பணிபுரிகிறார்.ராமநாதபுரம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இந்த போச்சோ வழக்கு நடக்கிறது. விசாரணை அதிகாரியாக இருந்த இன்ஸ்பெக்டர் முருகன் தொடர்ந்து ஆஜராகாததால் பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.
2 minutes ago
15 minutes ago
23 minutes ago