உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பு; மாநகராட்சி அதிகாரிகளை விளாசிய ஐகோர்ட் நீதிபதிகள்!

தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பு; மாநகராட்சி அதிகாரிகளை விளாசிய ஐகோர்ட் நீதிபதிகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலி கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றில் ஆய்வு மேற்கொண்ட ஐகோர்ட் நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் மாநகராட்சி அதிகாரிகளை வார்த்தைகளால் விளாசினர்.திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக தாமிரபரணி ஆறு இருந்து வருகிறது. இந்த ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. கழிவு நீர் கலப்பதை தடுப்பதில் மாநகராட்சி அலட்சியமாக இருப்பதாகவும் புகார் இருக்கும் நிலையில், தாங்களே நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.அதன்படி, திருநெல்வேலி கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றில் ஐகோர்ட் நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அவர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர். ஆய்விற்கு பின்பு முக்கிய உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பிக்க வாய்ப்புள்ளது.அதிகாரிகளிடம் நீதிபதிகள் , 'தாமிரபரணி ஆற்றில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க இரண்டு வருடம் அவகாசம் வேண்டும், என்று கேட்கிறீர்கள் ஏன்? உடனே தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்ய முடியாதா? கழிவு நீர் கலக்காமல் தடுக்க முடியாதா? நாங்கள் வருகிறோம் என்று திடீரென்று சுத்தப்படுத்தி இருக்கிறீர்கள், நாங்கள் ஆய்வு செய்ய வர மாட்டோம் என்று நினைத்தீர்களா? இனி தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்காமல் இருப்பதற்கு என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்? என சரமாரி கேள்வி எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Subramanian
நவ 11, 2024 16:00

How untreated effluent is passed to river ? Any consent is obtained? Effluent is let into the river with damaged / no treatment tem. What tnpcb is doing ? If any factory does this kind of job, tnpcb will allow or not.


Subramanian
நவ 11, 2024 15:47

தொழிச்சாலை கழிவை இவ்வாறு விட்டால் மாசுகட்டுப்பாடு வாரியம்அனுமதிக்குமா ? அரசாங்கத்தை ஏன் கண்டிக்கவில்லை ? சுத்திகரிப்பு இல்லாமல் ஏன் அனுமதிக்கிறார்கள்?


R.RAMACHANDRAN
நவ 11, 2024 07:23

பொய்யுரை செய்து தப்பித்துக்கொள்பவர்களுக்கு இதுபோன்று நேரடி ஆய்வு மேற்கொள்வதன் மூலம் பாடம் கற்பிக்கலாம்.


Gajageswari
நவ 11, 2024 05:35

ஏன் ஆய்வு செய்ய வேண்டும். கடுமையான தண்டனை அரசு அதிகாரிகளுக்கு வழங்கினால் நல்ல தீர்வும். நீதிமன்ற நிலுவைழக்குகள் குறையும்


hariharan
நவ 10, 2024 23:21

தாமிரபரணி என்ன எல்லா ஆறுகளும் குளங்களும் கழிவு கொட்டப்படும் இடங்கள். இங்கு எதாவது அரசு பணியாற்றுகிறதா? இதெல்லாம் இந்த நீதிபதிகளுக்கு தெரியாதோ?


அப்பாவி
நவ 10, 2024 21:24

முதலில் நீதிபதிகளுக்கு ஆய்வு செய்ய அதிகாரம் இருக்கா? அப்படீன்னா இன்னிக்கி தான் முழிச்சுக்கிட்டு ஆய்வு செய்ய வர்றாங்களா? இதே ஆய்வை மாதா மாதம் செய்வாங்களா? ஆய்வு செய்வதும் இவர்களின் வேலையாயிடுச்சா? புது இந்திய சட்டத்தில் இதெல்லாம் வந்திடுச்சா? மத்த மாவட்டங்களுக்கும் ஆய்வு செய்யப் போவாங்களா? நாட்டுக்கு விடிவு காலம் வந்திருச்சு கோவாலு.?


sankar
நவ 10, 2024 21:42

இந்த கேள்வி கேட்க உனக்கு என்ன அதிகாரம் இருக்கு - உள்ளே போயிராதே


muthu
நவ 10, 2024 20:48

Waste water should be physically seperated and mixing of this waste water to clear water shall be avoided by the following methods Have a double proof water pipes to carry waste water along the river boundry and let it drain to sea after Sewage treatment


Anantharaman Srinivasan
நவ 10, 2024 19:35

நீதிபதிகள் என்ன இறைவனே வந்து சொன்னாலும் அரசும் அதிகாரிகளும் துடைத்து போட்டுவிட்டு கழிவுநீர் கலக்க காரணமாயிருக்கும் ஆலைகளை தடைசெய்ய மாட்டார்கள்.


Ravichandran
நவ 10, 2024 18:10

மேட்டூர், பவானி, குமாரபாளையம், ஈரோடு ஆகிய இடங்களில் கழிவுநீர் காவிரி ஆற்றில் கலக்கிறது அது மட்டுமல்லாமல் சாயப்பட்டறை மற்றும் நிறுவனங்களின் கழிவுநீர்களும் காவிரி ஆற்றில் தான் கலக்கிறது ..நகராட்சி பேரூராட்சி அதிகாரிகள் குப்பைகளை காவிரி ஆற்றில் தான் கொட்டுகின்றனர்.. இதற்கும் தீர்வு வேண்டும் ஜயா.


K Raveendiran Nair
நவ 10, 2024 15:24

ஒவ்வொரு அதிகாரியையும் அந்த சாக்கடையில் முக்கி எடுக்க வேண்டும்


சமீபத்திய செய்தி