உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நவ.,15ல் தண்ணீர் மாநாடு; அறிவித்தார் சீமான்

நவ.,15ல் தண்ணீர் மாநாடு; அறிவித்தார் சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தஞ்சையில் நவ., 15ம் தேதி தண்ணீருக்காக மாநாடு நடத்தப்போவதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, ஐம்பூதங்களை அடிப்படையாகக் கொண்டு, நிலம், நீர்,வானம், நெருப்பு, காற்று மாநாடு நடத்தப்படும் என்று சீமான் அறிவித்திருந்தார். தேனியில் ஆடு, மாடு மாநாட்டை நடத்திய அவர், தர்மபுரியில் மலைகளின் மாநாட்டையும்த நடத்தினார். தூத்துக்குடியில் கடல் மாநாட்டையும் நடத்துவதாக அறிவித்த சீமான், கடலில் அப்பகுதி மக்களுடன் சென்று ஆய்வு நடத்தினார்.இந்த நிலையில், தஞ்சையில் நவ., 15ம் தேதி தண்ணீருக்காக மாநாடு நடத்தப்போவதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். திருவையாறு தொகுதியில் கல்லணை அருகே உள்ள பூதலூர் இந்த மாநாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஆரூர் ரங்
அக் 20, 2025 09:43

அப்படியே அந்தத் தண்ணீரில் வாழும் ஆமைகளுக்கும் மாநாடு நடத்துங்க.


Kasimani Baskaran
அக் 20, 2025 07:33

திராவிடத்தண்ணீர்... ஏனென்றால் இப்பொழுதெல்லாம் தீம்க்காவை கனிவுடன் காய்ச்சுகிறார்.


nagendhiran
அக் 20, 2025 07:32

அடுத்த நாடகம் சொல்லுங்க? இதையெல்லாம் எது பேசினாலும் கை?தட்டும் தம்பிகள் வேண்டுமனாலும் நம்புங்க? அனால் மக்கள்......


ராமகிருஷ்ணன்
அக் 20, 2025 04:57

நடுக்கடலில்,1000 அடி ஆழத்தில் மாநாடு நடத்தி உலக சாதனை படைக்க வேண்டும். நாங்கள் கடற்கரையில் இருந்து நின்று பூஜை செய்து விடுகிறோம்.


Vasan
அக் 20, 2025 08:35

கடலுக்கு செல்ல வேண்டாம். ஒரு கனத்த மழை பெய்யட்டும்.வேளச்சேரியிலேயே தண்ணீர் தண்ணீர் மாநாடு நடத்தலாம். அவர் மேம்பாலத்தில், மக்கள் கீழே வெள்ளத்தில். தண்ணீரின் முக்கியத்தை மக்கள் அறிந்து கொள்வார்கள்.


R. SUKUMAR CHEZHIAN
அக் 19, 2025 22:54

தண்ணீர் மாநாடா? இந்த திராவிட கும்பல்கள் ஏற்கனவே தமிழகத்தை...


V Venkatachalam
அக் 19, 2025 22:45

ஓகே ஓகே தண்ணீர் மாநாடு சரி. பாட்டில் மாநாடு எப்போ?


ஆரூர் ரங்
அக் 19, 2025 22:23

பேய் பிசாசுகள் மாநாடு மட்டும்தான் பாக்கி. அப்புறம் அமாவாசை.முழு இரவு ஜெபம்.


P.sivakumar
அக் 19, 2025 22:13

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியல அழுதுருவன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை