உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தர்ப்பூசணி நல்ல உணவு சிலர் செயலால் பிரச்னை

தர்ப்பூசணி நல்ல உணவு சிலர் செயலால் பிரச்னை

சென்னை:மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், சென்னையில் நேற்று அளித்த பேட்டி:நான்கு ஆண்டுகளில், சுகாதாரத்துறையில், 26,631 பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளிப்படைத்தன்மையான கலந்தாய்வில், 40,490 பேர் பயன் பெற்றுள்ளனர். சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமனம் தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. அதற்கு தீர்வு காணப்பட்டு, அப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும். டாக்டர் பணியிடங்களில் காலியிடங்கள் இல்லாத நிலை உருவாகி இருப்பது போல், இத்துறையில் அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும்.தர்ப்பூசணியை பொறுத்தவரை, அது நல்ல நீர்ச்சத்து உள்ள உணவுப்பொருள். ஒரு சிலர் செய்த தவறினால், பெரிய பிரச்னையானது. ஒரு சிலர் ஊசி வாயிலாக சுவை கூட்டுவது, நிறம் மாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதால், ஒட்டுமொத்தமாக தவறு நடந்திருப்பதாகக் கூற முடியாது. உணவு பாதுகாப்புத் துறையின் தொடர் நடவடிக்கையால், கலப்படம் பெரிய அளவில் குறைந்துள்ளது. தவறு செய்வோர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை