உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியா என்பதிலேயே குழப்பத்தில் உள்ளோம்: கவர்னர் ரவி வேதனை

இந்தியா என்பதிலேயே குழப்பத்தில் உள்ளோம்: கவர்னர் ரவி வேதனை

சென்னை: ''கலாசார விழாவை கொண்டாடும் போது, இது போன்ற விழாவை நாமும் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை, அனைவரின் மத்தியில் உருவாக்க வேண்டும்,'' என, தமிழக கவர்னர் ரவி தெரிவித்தார்.பீஹார் மாநிலம் உருவான தினத்தையொட்டி, அம்மாநிலத்தின் கலை, கலாசாரம், பண்பாடு குறித்த கண்காட்சி மற்றும் விழா, சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. கவர்னர் ரவி, கண்காட்சியை துவக்கி வைத்தார். ராம நவமியில் பாடப்படும் ராமர் பாடலை, இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து பாடி, அனைவரையும் உற்சாகப்படுத்தினார். விழாவில், அவர் பேசியதாவது:பீஹார் மாநிலத்தின் கலை, கலாசாரம், பண்பாடு மற்றும் உணவு முக்கியத்துவம் வாய்ந்தது. கலாசாரத்தை போற்றி கடைப்பிடிக்க வேண்டும். அதற்கு, இது போன்ற விழாவை கொண்டாட வேண்டும். சுதந்திரத்திற்கு முன், 15 மாநிலங்கள் தான் இருந்தன. தற்போது, 28 மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் பிரதேசங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநில மக்களும், தங்கள் மாநிலத்தின் கலாசாரத்தை உணர்ந்திருப்பது முக்கியமானது. அதுதான் பாரதத்தை உருவாக்கியுள்ளது. அதை நாம் விட்டுவிடக்கூடாது. ஏனெனில், 'பாரத்' என்பது ஒன்றே ஒன்று தான்.துரதிருஷ்டவசமாக நம் கல்வி முறையில், 'பாரத்' என்றால் என்ன என்பதை அறிமுகம் செய்யவில்லை. இந்தியா என்பதிலேயே குழப்பத்தில் உள்ளோம். அதில், அரசியல் உள்ளது. பாரத் போல தனித்துவமான நாடு, உலகில் எதுவும் இல்லை. ஏனெனில், அவை ஆட்சியாளர்கள், ராணுவ வீரர்கள், சக்தி வாய்ந்த மனிதர்களால் பிடிக்கப்பட்டு அதிகாரத்தால் உருவாக்கப்பட்டவை. ஆனால், பாரத் அப்படி இல்லை. பல மன்னர்கள், பேரரசர்களால் வழி நடத்தப்பட்டது. அவர்கள் எப்போதும் பாரதத்திற்காகவே நின்றுள்ளனர். இதற்கு, பல்லாயிரம் ஆண்டு வரலாற்று சான்று உள்ளது. கடந்த 1947ல் இருந்து தான், இந்நாடு அரசியல் நாடாக உருவானது. என் பாட்டி ராமேஸ்வரம் வந்துள்ளார். அப்போது அவரது பயணத்திற்கு, மொழி ஒரு பிரச்னையாக இருக்கவில்லை என்று கூறினார். தற்போது, மொழியை பற்றி நிறைய பேசி வருகிறோம். இவ்வாறு கவர்னர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

अप्पावी
மார் 23, 2025 09:12

தமிழகத்துக்கு தமிழ்தெரிந்த, தமுழர் நாகரிகம் அறிந்தவர் ஆளுனராக வரவேண்டும். ஒன்றியத்துக்கு இது புரிவதில்லை. தமிழ்னா கிலோ என்ன விலைன்னு கேட்பவர்களை கெவுனராப் போட்டு நாட்டு ஒற்றுமையை வளர்க்கிறேன்னு நம்ம உயிரை எடுக்குறாங்க.


RAMKUMAR
மார் 23, 2025 07:34

ஒரு விஷத்தை எடுத்து சொல்ல, சரியான பேச்சாளர் பிஜெபி க்கு தேவை. சீமான் போல் உதாரணத்துக்கு, தீப்பொறி ஆறுமுகம் உதாரணத்துக்கு, இப்படி, சரியான பேச்சாளர்கள் பத்து பேர் போதும். தமிழ் நாடு நம்வசம். Please plan it.


अप्पावी
மார் 23, 2025 06:50

உங்க பாட்டி வந்த போது இந்தி திணிப்பு கிடையாது. அதுக்கு முன்னாடி ராமர் வந்த போதும் நல்லாத்தான் இருந்திச்சு. இப்போ நீங்கள்காம் வந்துதான் மும்மொழின்னு இந்தியைத் திணிக்க படாத பாடு படறீங்க.


Kasimani Baskaran
மார் 23, 2025 06:45

தமிழக கவர்னரின் வேதனை ஞாயமானதே. அதே சமயம் பாஜக பிரிவினைவாத கேடிகளை சுளுக்கெடுக்க தயங்குவது வேதனை.


pmsamy
மார் 23, 2025 05:14

ரவி உன்னோட வேலை சும்மா இருக்கிறது அதை மட்டும் செய்


நிக்கோல்தாம்சன்
மார் 23, 2025 08:17

எப்படி சார்? ஸ்டிக்கர் மாதிரியா?


xyzabc
மார் 23, 2025 05:01

சுற்றி இருப்பவர்கள் திராவிட மாடல் ஆட்சியாளர்கள்.


கிஜன்
மார் 23, 2025 02:57

இந்தியா என்பதில் குழப்பம் இருப்பதாக தெரியவில்லை .... இந்தியா என்பது இந்தி என்பதில் தான் குழப்பம் இருக்கிறது ...


மதிவதனன்
மார் 23, 2025 01:47

எங்க கண்களை பார்த்தா எனா கஞ்சா அடிச்ச மாதிரியா இருக்கு , எங்களுக்கு தூய்மையான இந்தியா வலிமையான தமிழகம் நன்கு தெரிகிறது


Padmasridharan
மார் 23, 2025 01:32

வாயிலிருந்து சப்தம் வருவதினால்தானே மொழியைப் பற்றி பேசுகிறார்கள். இது பேசாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்தும் செயல் என்று பாரத மக்களுக்கு தெரியாதா. Only politicians have to realise that "Unity in Diversity" has became now Diversity in Unity


வரதராஜன்
மார் 23, 2025 01:00

ரவி சார் நீங்க யாருக்கு பிரச்சனை இல்லை நீர் தமிழ்நாடு விட்டு போனா போதும் தினசரி அவங்கவங்க வேலையை அவங்க அவங்க பாத்துக்குவாங்க நீங்க வந்து நான் இருக்கேன்னு காட்ட வேண்டிய அவசியமே இல்லை


முக்கிய வீடியோ