உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல

நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல

ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒவ்வொரு கலாசாரம், உணர்வுகள் உண்டு. அதேபோல், ஒவ்வொரு மாநிலத்திற்கும் கலாசாரம், மொழி மற்றும் உணர்வுகள் இருக்கும். தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கும்போது, மத்திய அரசு, ஒவ்வொரு மாநிலத்தின் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டும். ஏனெனில், அதுதான் வளர்ச்சிக்கான அடித்தளம். தமிழக கல்விக் கொள்கை, மொழிக் கொள்கை குறித்து வலியுறுத்துகிறது. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் கிடையாது. இந்திய அரசியலமைப்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், விருப்பத்திற்கும், கட்டாயத்திற்கும் வித்தியாசம் உள்ளது. தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. எந்த நாட்டிற்கு சென்றாலும், அந்த மொழியை, அதன் வழியே அறிந்து கொள்ளலாம். தேசிய கல்விக் கொள்கை எனும் சட்டை, அனைவருக்கும் பொருந்தாது. - மகேஷ் பள்ளி கல்வி அமைச்சர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை