உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அரசிடம் கூடுதலாக ரூ.105 கோடி கேட்டுள்ளோம்: தாட்கோ விளக்கம்

 அரசிடம் கூடுதலாக ரூ.105 கோடி கேட்டுள்ளோம்: தாட்கோ விளக்கம்

சென்னை : 'கூடுதல் நிதி கிடைத்தால், 'சி.எம்., அரைஸ்' திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும், மானியத்துடன் கடன் வழங்கப்படும்' என, தாட்கோ தெரிவித்துள்ளது. 'சி.எம்., அரைஸ் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மானியம் வழங்க நிதி இல்லை' எனக்கூறி, விண்ணப்பங்களை, தாட்கோ அதிகாரிகள் நிராகரித்து வருகின்றனர். இதுகுறித்து, நம் நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதுதொடர்பாக, தாட்கோ உதவி இயக்குநர் சிவகுரு அளித்துள்ள விளக்கம்: நடப்பு நிதியாண்டில், முதல்வரின் தொழில் முனைவோர் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட, 75 கோடி ரூபாய் நிதி, 3,915 பயனாளிகளுக்கு மானியமாக விடுவிக்கப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இத்திட்டத்தின் கீழ் 4,687 பயனாளிகளுக்கு, 9-0 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது சுய தொழில் செய்து வருகின்றனர். மேலும், 5,466 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து, வங்கி ஒப்புதலுக்காக காத்திருக்கின்றனர். நடப்பு நிதியாண்டில், இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவிடப் பட்டுள்ளது. அரசிடம் கூடுதலாக, 105.10 கோடி ரூபாய் நிதி கேட்டு, கடந்த, 11ம் தேதி கருத்துரு அனுப்பி உள்ளோம். நிதி கிடைத்தால், விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும். இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி