உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எங்களுக்கு யாரும் எதிரி கிடையாது: அண்ணாமலை

எங்களுக்கு யாரும் எதிரி கிடையாது: அண்ணாமலை

சென்னை: '' தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து வருகிறது. எங்களுக்கு யாரும் எதிரி கிடையாது,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம். இ.பி.எஸ்., அளித்த பேட்டி குறித்து எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை அளித்த பதில்: அனைவரது நோக்கமும் திமுக.,வை வீட்டிற்கு அனுப்புவது தான். இன்னும் 6 மாதம் உள்ளது. மக்கள் திமுக மீது கோபத்தில் உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரிக்கிறது. இன்றைக்கு இது தேவையில்லாத விஷயமாக பார்க்கிறேன். ஏனென்றால், பா.ஜ., வளர்ந்து வருகிறது. கட்சியை வளர்ப்பதற்கு இது முக்கியமான நேரமாக பார்க்கிறோம். கடினமாக உழைக்கிறோம். தேர்தலுக்கான நேரமும், சூடும் இன்னும் வரவில்லை. வரும் போது பேசுவோம். தேஜ கூட்டணி வலிமையடைந்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uwktn74l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கண்ணாடியை பார்த்து முதல்வர் பேசுகிறாரோ என சந்தேகம் உள்ளது. மொழியை யாரும் திணிக்கவில்லை. பல பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படவில்லை. அரசு பள்ளிகளில் மட்டும் உங்கள் மொழிக் கொள்கையை திணிக்காதீர்கள் என சொல்கிறோம். 2020 வரை மூன்றாவது மொழி திணிக்கப்பட்டது. பிறகு ஒரு வாய்ப்பாக வருகிறது. எதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது என தெரியாது. தொகுதி மறுசீரமைப்பு குறித்து கற்பனையாக அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. எந்த தகவல் அடிப்படையில் கூட்டம் நடக்கிறது. அதற்கு ஆதாரம் என்ன இருக்கிறது. மக்கள் தொகை முகாந்திரம் இல்லை என சொல்லிய பிறகும் முதல்வர் திசை திருப்புகிறார். மக்கள் பிரச்னையை திசை திருப்புகிறார்.திமுக., வீட்டிற்கு அனுப்ப வேண்டும் போகணும். பா.ஜ., வளர்ந்து வருகிறது. எங்களுக்கு யாரும் எதிரி கிடையாது. இந்த கட்சி வளர வேண்டும். கூட்டணியில் யார் வருவார்கள் என்பது குறித்து வரும் காலத்தில் பேச வேண்டும். திமுக.,வினர் கடத்தலில் ஈடுபடுகின்றனர். மீனவர் என்ற போர்வையில் தி.மு.க.,வினர் போதைப் பொருட்களை கடத்தி, மீனவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகின்றனர். மீனவர் பெயரை பயன்படுத்தி திமுக.,வினர் கடத்தலில் ஈடுபடுகின்றனர். நல்ல மீனவர்களும் கைதுசெய்யப்படுவார்கள். ஊழல் செய்பவர்களுக்கு கண் தெரியாது. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இதெல்லாம் தெரியாதா இவ்வாறு அண்ணாமலை கூறினார்.கோவை: ''கூட்டணி குறித்து அவசரத்தில் பேச முடியாது. இரண்டு நாட்களில் அமித்ஷா தமிழகம் வரும் போது மாற்றங்கள் வரும்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

மாற்றம் வரும்

சிவராத்திரி அன்று கோவை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்ததாக தகவல் வெளியானது.

பதில்

இதனைத் தொடர்ந்து பா.ஜ., உடனான கூட்டணி குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அளித்த பதில்: தி.மு.க.,வை வீழ்த்த தயார். ஒரே எதிரி தி.மு.க., தான். மற்ற எந்தக் கட்சியும் கிடையாது. தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்பது தான் குறிக்கோள். ஓட்டுகள் சிதறாமல் ஒருங்கிணைத்து மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை அகற்றுவது தான் அ.தி.மு.க.,வின் தலையாய கடமை. அது 2026 ல் நடக்கும்.பா.ஜ., குறித்து ஆறு மாதங்கள் கழித்து கேளுங்கள். எல்லாம் யூகத்தின் அடிப்படையில் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்ல முடியும். யார் யார் இங்கு இருக்கிறார்கள். யார் யார் அங்கு இருக்கிறார்கள் என்பதற்கு 6 மாதத்திற்கு முன் பதில் சொல்லப்படும். மறைமுகமாக செய்ய முடியாது. எல்லாம் வெளிப்படையாக செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மாற்றம்

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: கூட்டணி குறித்து அவசரத்தில் பேசினால் தவறாக போய்விடும். இது அவசரத்தில் பேசும் விஷயம் கிடையாது. நாளை மாலை நான்கு மணிக்கு சென்னையில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். அனைத்து விஷயங்களுக்கும் பதில் சொல்லப்படும். அமித்ஷா இன்னும் இரண்டு நாளில் தமிழகம் வருகிறார். அப்போது எத்தனை மாற்றம் வருமோ. வேலுமணி அழைத்ததால், அவரது இல்லத் திருமண விழாவில் பங்கேற்றேன். திருமண விழாவிற்கு போனது தவறா. இ.பி.எஸ்., வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்வார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பல்லவி
மார் 04, 2025 22:21

மலையை நம்பி வாழும் மக்களுக்கு ஏன் இந்த நிலைமை, கல்லானாலும் மண்ணாக இருப்பினும் கரை சேருவது கஷ்டம் தான் பாவம், கல்லானால் மூழ்கிவிடும் மண்ணானால் கரைந்துபோகும்


S.Martin Manoj
மார் 04, 2025 21:50

எடப்பாடி காலில் அண்ணாமலை விழுந்த தருணம்


Nagendran,Erode
மார் 05, 2025 15:27

எப்படி திருமாவளவன் காலில் ஸ்டாலின் விழுந்த தருணம் மாதிரியா அடேய் சமச்சீர் அறிவாலய அடிமையே உன் ஐந்தறிவுக்கு ஏற்றவாறு கருத்தை பதிவிடு...


அப்பாவி
மார் 04, 2025 21:41

வழக்கம்போல நாலு சீட்டு ப்ராப்தி ரஸ்து.


sridhar
மார் 04, 2025 19:14

மனப்பூர்வமான கூட்டணி அமைந்தால் அதிமுக + பிஜேபி வெற்றி நிச்சயம். வேண்டா வெறுப்பு கூட்டணி என்றால் இரண்டு கட்சிக்கும் பெரும் நஷ்டம். யோசித்து செய்யட்டும்.


spr
மார் 04, 2025 18:38

பாஜகவுக்கு எதிரி வெளியில் இல்லை அதற்கென்று மாநிலத்து தலைவரும் இல்லை எல்லோரும் மத்திய அமைப்பின் எடுபிடிகள் மட்டுமே அண்ணாமலைக்கு இன்னமும் புரியவில்லை. பகவான் கிருஷ்ணரே துரியோதனை அழிக்க சேராதவருடன் எல்லாம் கூட்டணி வைத்தாராம்


அரவழகன்
மார் 04, 2025 18:22

நாசமா போச்சு...அது தான் ஃபைல்ஸ் எல்லாம் கிடப்பில் கிடக்கிறதோ...?


ஆரூர் ரங்
மார் 04, 2025 17:33

எடப்சூடன் சேர்ந்தா அழிவு நிச்சயம். கூட்டு சேர்ந்து அவரை அழிக்கும் எ‌ண்ண‌ம்?


Laddoo
மார் 04, 2025 16:26

பத்துத் தோல்விக்கு மறுபடியும் தோல்வி பயம் வந்துடுச்சி சீனியர் தலைவர்களும் தொண்டர்களும் சோர்ந்து விட்டனர். வேல்மணியும் வெறுத்துட்டார். களத்தில் வேலை/செலவு செய்ய ஆட்களில்லை நடுநிலையாளர்களின்/அடித்தட்டு மக்களின் முதல் சாய்ஸ் அண்ணாமலையே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை