உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எவ்வளவோ சோதனைகளை தாண்டி சாதனை படைத்துள்ளோம்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு

எவ்வளவோ சோதனைகளை தாண்டி சாதனை படைத்துள்ளோம்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தர்மபுரி: எவ்வளவோ தடங்கல், சோதனைகளை எல்லாம் தாண்டி சாதனை படைத்து இருக்க கூடிய, ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தர்மபுரியில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனின் இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மகளிர் உரிமை தொகை திட்டத்தில், இன்னும் கூட தகுதி உடையவர்கள் சிலர் விடுபட்டு இருந்தால், அவர்கள் உனடியாக கோரிக்கை வைத்தால், நிச்சயமாக வழங்கப்படும் என்ற நம்பிக்கையையும், உறுதி அளிக்கிறேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j4e0d50g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சாதனை

ஒரு நாட்டின், மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான ஒரு அறிகுறியாக இருக்க கூடிய, ஜிடிபி வளர்ச்சியில் தமிழகம் தான் நம்பர் ஒன் மாநிலமாக உருவாகி இருக்கிறது. இது நாங்கள் வெளியிட்ட அறிக்கை அல்ல. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை. நீங்கள் நினைத்து பாருங்கள். எவ்வளவோ தடங்கல், சோதனைகள். அந்த சோதனைகளை எல்லாம் தாண்டி சாதனை படைத்து இருக்க கூடிய, ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி. இன்னொரு பக்கம் தேர்தல் பணிகள், எஸ்ஐஆர் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

விழிப்புடன்...!

எஸ்ஐஆர் பணிகளில் திமுக எவ்வளவு வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறது. நமது வாக்குரிமையை நாம் காப்பாற்றியாக வேண்டும். இன்னும் விழிப்புடன் வேலை பார்க்க வேண்டும். இப்போது பாதி வேலை மட்டுமே முடிவடைந்துள்ளது. இன்னும் பாதி வேலைகள் இருக்கிறது. தேர்தல் நடந்து, ஓட்டு எண்ணிக்கை முடிந்து ரிசல்ட் அறிவிக்கும் வரைக்கும் நமக்கு வேலை இருக்கிறது. இரண்டு வாரத்தில் டிசம்பர் முடிந்து ஜனவரி 1ம் தேதி வர போகிறது.

7வது முறையாக...!

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கிறது. திமுக அரசின் சாதனைகள் மக்களுக்கு சென்றடைந்திருக்கிறது. எதிரிகள் நம்மை வீழ்த்த முயற்சிக்கும் போது, நாம் ஏமாந்துவிடக் கூடாது. நமது சாதனைகளை வீடு வீடாக சென்று மக்களிடம் கூறி ஓட்டாக மாற்ற வேண்டும். 7வது முறையாக திமுக ஆட்சி உருவாகி உள்ளது என்ற பெருமை நமக்கு வர வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சி தொடர வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Sathyan
டிச 15, 2025 11:39

கொள்ளை அடிப்பதும், இந்து கோயில்களை மட்டும் இடிப்பதும் தான் திருட்டு/தீய திமுக வின் சாதனை. உன்னுடைய உதவாக்கரை பெண்பித்தன் உதயநிதி NEET தேர்வு தமிழ மாணவர்களுக்கு இருக்காது என்று மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடி பல மாணவர்களின் வாழ்க்கையை நாசமாக்கியதும் தீய திமுக வின் மிகப்பெரிய சாதனை.


Rajasekar Jayaraman
டிச 15, 2025 08:53

கூட்டுக் கொள்ளை சாதனை.


Ramchandran Natarajan
டிச 15, 2025 07:07

கடவுள் மறுப்பு என்று மக்களிடம் சொல்லி தன் வீட்டில் கடவுளை கும்பிடுபவர்களை கொண்ட குடும்பத்தில் அவர் வைத்துதான் சட்டம் என்றால் எப்படி. கேட்டால் திராவிட மாடல். பொது வாக்கெடுப்பு நடத்தி கடவுள் எதிர்ப்பு கொள்கையை அமல்படுத்தவேண்டும். இவர்கள் கொள்கையை ஏற்றுக்கொள்ள கூடாது.


xyzabc
டிச 15, 2025 02:31

என்ன சொல்வது ? நேரு, பொன்முடி, துரை முருகன், ஜகத் ரக்ஷகன் உடைய சோதனைகள் பத்தி ? இருந்தாலும் மகளிர் உரிமை தொகையை கொடுத்து சாதனை செய்து உள்ளோம். மத்திய அரசு பணம் கொடுக்காததால் நிறைய சாதனைகள் செய்ய முடியவில்லை.


சந்திரன்
டிச 14, 2025 20:07

சோதனைகளை தாண்டி நீங்கள் சாதனை படைக்கவில்லை! உங்கள் திராவிட மாடல் ஆட்சியின் சோதனை, வேதனை எல்லாவற்றையும் தாங்கி மக்கள்தான் சாதனை படைத்துள்ளனர்!


Sridhar
டிச 14, 2025 20:01

அதுதான் டாஸ்மாக்கிலிருந்து கனிமம் மற்றும் இதர கொள்ளைகள் பற்றி இந்த உலகத்துக்கே தெரியுமே ஆனா, இந்த சாதனைகளை நிகழ்த்துவதற்கு உங்களுக்கு பல சோதனைகளை தாண்டி வரவேண்டியிருந்ததுங்கறது எங்களுக்கெல்லாம் புது விஷயம். ஆட்சி உங்க கையில இருக்கும்போது அப்படி என்ன சோதனை வந்துவிட முடியும்? ஓஓ ED சிபிஐ பத்தி சொல்றீங்களா?


Ramesh Sargam
டிச 14, 2025 19:44

திமுக அரசு சாதனை படைத்துள்ளதாக மக்கள் கூறவேண்டும்.


V Venkatachalam, Chennai-87
டிச 14, 2025 19:27

சோதனைகளை வழக்கம் போல மக்களுக்கு கொடுத்தோம். அவங்களால் அதை எதிர்த்து எதுவுமே செய்ய முடியல. அதுனால சோதனைகளில் வழக்கம் மேல் நாங்களே ஜயிச்சிட்டோம். எந்த கொம்பனாலும் இது மாதிரி ஜெயிக்க முடியாது.


vbs manian
டிச 14, 2025 19:11

பத்து லச்சம் கோடிக்கு மேல் கடன் சுமை. மக்கள் தலை மேல்.


vbs manian
டிச 14, 2025 19:09

பாதிக்கு மேல் கற்பனை சோதனைகள்.


சமீபத்திய செய்தி