உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நமக்கான புதிய சட்டங்களை நாமே உருவாக்க வேண்டும்; கவர்னர் ரவி வலியுறுத்தல்

நமக்கான புதிய சட்டங்களை நாமே உருவாக்க வேண்டும்; கவர்னர் ரவி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''நமக்கான சட்டங்களை நாமே புதிதாக உருவாக்க வேண்டும்,'' என, சட்ட பல்கலையில் நடந்த அரசியலமைப்பு தின விழாவில், கவர்னர் ரவி பேசினார்.சென்னை, பெருங்குடி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை வளாகத்தில், இந்திய அரசியலமைப்பு தின விழா நடந்தது. இதில், தமிழக கவர்னர் ரவி பேசியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதற்கான உண்மையான நோக்கம், இன்னும் நிறைவேறவில்லை. சாதாரண மக்களுக்கும், நீதி சென்று சேர வேண்டும்.நீதிமன்ற வழக்காடு மொழி, சாதாரண மக்களுக்கு புரியும்படி இல்லை. அவர்களும் புரிந்துகொள்ளும் வகையில், வழக்காடு மொழிகள் மாற்றம் பெற வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளில், பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் நீதிமன்ற தீர்ப்புகளையே, நாம் இன்றும் வழிகாட்டிகளாக பயன்படுத்தி வருகிறோம்.நம் நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளா கிறது. இந்நிலையில், நமக்கான தீர்வுகளை நாமே உருவாக்கும் வகையில், நமக்கு நாமே சட்ட நெறிமுறைகளை உருவாக்கும் பொறுப்பு, நாளைய வழக்கறிஞர்களும், இன்றைய சட்ட மாணவர்களுமாகிய உங்களுக்கும் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

சாமானியன்
நவ 27, 2025 11:23

கவர்னரின் கருத்து சரிதான். அதே வேளையில் எனக்குத் தெரிந்த சட்ட மாற்றங்கள் கீழே. 1. திமுக எவ்வெவ்வாறு சட்டத்திற்கு உட்பட்டு ஊழல் செய்து வரிப்பணத்தை சுரண்டி மெகா கோடீஸ்வரராக உள்ளனர் ? 2. பெயில் நடைமுறைகளை சீர்திருத்தனும். ஒருமுறை ரத்தானால் மூன்று மாதங்கட்கு அப்ளை பண்ண முடியாது. 3. ரிடையர்மெண்ட் ஆன அரசியல்வாதிகட்கு ஒரே ஒரு பென்ஷன் மட்டுமே. வருமான வரி ஏற்கனவே கட்டுவோர்க்கு பென்ஷன் நோ. 3. சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகியவைகளில் ஏடாகூடமாக நடந்தால் பதவி காலி.


Rameshmoorthy
நவ 27, 2025 10:46

Only educated should be people representative


Oviya Vijay
நவ 27, 2025 10:21

கவர்னர்கள் நாட்டிற்கு தேவையில்லாதவர்கள் என்பது தான் முதல் புதிய சட்டமாக இருக்க வேண்டும்.


RAVINDRAN.G
நவ 27, 2025 10:15

சட்டம் இயற்றுவது சரிங்க சார். அதை நடைமுறைப்படுத்தி செயற்பாட்டில் இருக்கிறதா என்று ஆய்வு செய்யவேண்டும். நம் நாடு சட்டங்கள் இயற்றுவதோட சரி. அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அரசியல்வாதிகள் தொழில் அதிபர்கள் சட்டத்தை சுலபமாக வளைத்துவிடுகிறார்கள் அவர்களுக்கு சட்டம் ஒரு விளையாட்டு. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சட்டம் ஒரு இருட்டறை அது இவர்களைபோன்றவர்களின் கழுத்தை நெரிக்கும் சுறுக்குக்கயிறு.


Almighty
நவ 27, 2025 10:03

அண்ணாமலை இங்லாந்தில் என்ன படித்தார்? தெரிந்து கருத்து போடுங்க உ. பி.


Ram Thevar,Thampikkottai
நவ 27, 2025 09:43

நாம் ஏன் இன்னும் மேற்கத்திய சட்டங்களை கடைபிடிக்க வேண்டும். நமக்கான சட்டங்களை நாமே ஏற்ற வேண்டும் விரைவான அனைவருக்கும் சமமான சட்டம் வேண்டும்.


பாமரன்
நவ 27, 2025 09:14

சமீபகாலத்தில் முதல் முறையாக சரியாக பேசியிருக்கிறார்


guna
நவ 27, 2025 09:35

அவர் சொல்வது கொத்தடிமைகளுக்கு அல்ல....


mindum vasantham
நவ 27, 2025 09:02

அண்ணாமலை பேசினால் ஓகே இவரு யாரு


பாமரன்
நவ 27, 2025 09:15

அதானே... அவரு இங்கிலாந்த்ல ட்ரைனிங் எடுத்துருக்கார்ல்ல...


மேலும் செய்திகள்