உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எங்களுக்கு தேவை கோவை ரயில்வே கோட்டம்; ரயில்வே அமைச்சரிடம் பல்வேறு அமைப்பினர் முறையீடு

எங்களுக்கு தேவை கோவை ரயில்வே கோட்டம்; ரயில்வே அமைச்சரிடம் பல்வேறு அமைப்பினர் முறையீடு

கோவை: 'கோவையை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் ஏற்படுத்த வேண்டும்' என, ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம், பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தினர்.கேரளா மாநிலத்தில் உள்ள பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களில் ஆய்வை முடித்த ரயில்வே மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று முன்தினம் இரவு கோவை வந்தார். அவரை பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்து, கோவையின் ரயில்வே தேவைகள் குறித்து மனு அளித்தனர்.கோவை ரயில்வே ஸ்டேஷனில் மேம்பாட்டு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்; நல்லாம்பாளையத்தில் ரயில் பராமரிப்பு பணிமனை ஏற்படுத்த வேண்டும். மயிலாடுதுறை - தஞ்சாவூர் ரயில், பழநி, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக கோவை வரை நீட்டிக்க வேண்டும். கோவை - ராமேஸ்வரம், கோவை - திருச்செந்துார் இடையே புதிய ரயில்கள் இயக்க வேண்டும். போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனை கோவை தெற்கு சந்திப்பு என, பெயர் மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.அப்போது, இந்திய தொழில் வர்த்தக சபை, கொங்கு குளோபல் போரம், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு, சிங்காநல்லுார் ரயில் பயணிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அமைச்சரை சந்தித்தனர்.

புதிய கோட்டம் உருவாக்குங்க!

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ராஜேஷ் லுந் சார்பில் அளித்த மனுவில், 'மிக பழமையான போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன், 1862ல் துவங்கப்பட்டது. ராயபுரம், திருச்சிக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக துவங்கப்பட்ட பழமையான ரயில்வே ஸ்டேஷன். சேலம், மதுரை, பாலக்காடு கோட்டங்களில் இருந்து சில பகுதிகளை பிரித்து, கோவையை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டத்தை உருவாக்க வேண்டும்' என கூறியுள்ளார். இதே கோரிக்கையை பல்வேறு அமைப்பினரும் தெரிவித்திருந்தனர்.

போத்தனுாரில் நிற்கணும்

பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் அளித்த மனுவில், 'போத்தனுாரில், கோவை - மங்களுரு - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், கோவை - துாத்துக்குடி - கோவை வாரம் இருமுறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், நின்று செல்ல வேண்டும்' என, கோரிக்கை விடுத்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rajan
நவ 05, 2024 15:04

Central government started upgrading the railway station, Irugur railway station is a Junction. Presently platform in ground level only. Very very difficult to boarding and de-boarding from train. Requesting railway ministry to take care of passager safety/needs and comply it.


Rajarajan
நவ 05, 2024 11:02

கோவை எக்ஸ்பிரஸ் மாதிரி, கோவை - தாம்பரம் தினசரி பகல் இன்டெர்சிட்டி / இரவு வண்டி கேளுங்கப்பா வழி - சேலம், விருத்தாச்சலம், விழுப்புரம்.


JeevaKiran
நவ 05, 2024 11:01

தமிழகத்திற்குள் இயக்கப்படும் ரயிலை ஏன் பாலக்காட்டில் இருந்து இயக்குகிறார்கள். கோவையிலிருந்து இயக்கப்பட வேண்டும். மலையாலத்தான் அதனை ஒற்றுமையாக இருக்கிறான். நம் அ.வியாதிகள் டெல்லியில் ஓசியில் சமோசாவும் டீ குடிக்கவும் தான் லாயக்கு.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
நவ 05, 2024 09:23

மனுவை வாங்கி விட்டு தலையை ஆட்டுவாரு அமைச்சர். அப்புறம் குப்பையிலே தூக்கி போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பார். நாம் அதிகாரத்தை கைப்பற்றாதவரை நமக்கு விடிவில்லை


S. Gopalakrishnan
நவ 05, 2024 11:08

நீங்கள் வோட்டு போட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ன செய்கிறார்?


Rajpal
நவ 06, 2024 07:51

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வந்த மறுநாளே மதுவிலக்கை அமல்படுத்துவோம், முதல் கையெழுத்து நீட்டை ஒழிப்பது என்பது போலவா??


Saleem
நவ 05, 2024 08:12

கோவை ரயில்வே கோட்டம் பற்றிய கோரிக்கை இங்குள்ள மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆனால் மக்கள் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர் இது பற்றி வாயே திறப்பதில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை