உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அமைச்சர் செய்தியாளரிடம் மன்னிப்பு கேட்டால் ‛‛ஓகே: தமிழக அரசு தகவல்

மத்திய அமைச்சர் செய்தியாளரிடம் மன்னிப்பு கேட்டால் ‛‛ஓகே: தமிழக அரசு தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே, பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து தான் தெரிவித்த கருத்துகளுக்காக ஷோபா மன்னிப்பு கோரினார்.

வழக்குப்பதிவு

தமிழக மக்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார். மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே வெறுப்பு பேச்சு தொடர்பான திமுக.,வின் புகார் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மத்திய இணையமைச்சர் ஷோபா மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.வன்முறையைத் தூண்டும் வகையிலும், மதப் பிரச்னைகளை உருவாக்கும் விதமாகவும் பேசியதாக தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

செய்தியாளர்கள் சந்திப்பு

அப்போது, 'ஷோபா கரந்தலஜே செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும்,' என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. செய்தியாளர்களிடம் மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக, மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக ஷோபா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. 'செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்த கருத்துக்கு, செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்புக் கோரினால் தான் சரியாக இருக்கும்,' என நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும் இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

RAMAKRISHNAN NATESAN
ஆக 07, 2024 21:54

ராமேஸ்வரம் கஃபே குற்றவாளி சென்னையில் தங்க உதவியது யார் ????


ஆரூர் ரங்
ஆக 07, 2024 20:52

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் பிரதமரை கேடி என விமர்சித்த தயாநிதி மாறன் மன்னிப்புக் கேட்கவில்லையே.


Velan Iyengaar
ஆக 08, 2024 08:20

கேடிய கேடி என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வார்கள் ???


தமிழ்வேள்
ஆக 07, 2024 19:51

ஹிந்து ஜனங்களை ஹிந்து தர்மத்தை தவறாக தாறுமாறாக பேசிய கனிமொழி ஆ.ராசா தர்மபுரி செந்தில் சிவசங்கரன் உதவாத நிதி ஆகியோரை மன்னிப்பு பகிரங்கமாக கேட்க சொல்ல கோர்ட்டுக்கு துணிச்சல் இருக்குமா?


Velan Iyengaar
ஆக 07, 2024 19:14

இந்த அம்மா மன்னிப்பு கேட்பது எடியூரப்பாவுக்கு தெரியுமா ?? அவர்கிட்ட சொல்லாம இந்த அம்மா எதையுமே அசைக்காதே


Velan Iyengaar
ஆக 07, 2024 19:13

bjp கட்சி ஆட்களையும் மன்னிப்பையும் பிரித்து பார்க்கவே முடியாது ... சும்மா அசால்ட்டா கேட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள் ....


venugopal s
ஆக 07, 2024 19:03

தமிழர்களை இழிவு படுத்திய மத்திய பாஜக அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காத தமிழக பாஜக தலைவர்களுக்கு எதுவுமே கிடையாதா?


Kumar Kumzi
ஆக 07, 2024 20:27

டாஸ்மாக் நாட்டை பற்றி உலகமே காறித்துப்புதே.ஜாபர் சாசாதிக் யாருனு சொல்லு கொத்தடிமையே


subramanian
ஆக 09, 2024 13:01

தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னாரே ஈ வே ரா . தமிழன் சோற்றால் அடித்த பிண்டம் என்று சொன்னாரே கருணாநிதி.... அப்போது வாயில் என்ன இருந்தது...


GMM
ஆக 07, 2024 18:31

சென்னை மாகாணத்தில் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்த இடம். மத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்ட பின், வழக்கு, விசாரணை தேவையா? அப்படியென்றால், நடந்து முடிந்த தேர்தலுக்கு பின் மக்கள் பிரதிநிதிகள் இந்த பகுதியில் யாரும் இப்படி பேசவில்லை என்று திமுக உறுதி செய்த பின் தேர்தல் ஆணையம் மனு பெற வேண்டும். வழக்கில் பிற கட்சியினர் வெறுப்பு பேச்சு இல்லை என்ற உறுதி மொழி மன்றம் பெற்று இருக்க வேண்டும். திமுக ஆளும் தமிழக நிர்வாகத்திற்கு குறிப்பிட்ட வழக்கில் என்ன வேலை? பிரமாண பத்திரம் பற்றி உலகம் முழுவதும் தெரிவிக்க ஆட்கள் / மீடியா உண்டு. செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை?


subramanian
ஆக 07, 2024 18:18

இந்த திமுக அடாவடி பேச்சாளர்கள் உலகம் முழுவதும் உள்ள அனைத்து தொலைக்காட்சி களிலும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து அனைத்து செய்தித்தாள்களில் எத்தனை மன்னிப்பு வெளியிடவேண்டும்........ மோடிக்கு செ‌ய்யு‌ம் துரோகம் எத்தனை மன்னிப்பு கேட்டால் தீரும்?


Kumar Kumzi
ஆக 07, 2024 17:58

பயங்கரவாதிகளின் கூடாரம் டாஸ்மாக் நாடு எதுக்கு மன்னிப்பு கோரனும்


ஆரூர் ரங்
ஆக 07, 2024 17:45

செய்தியாளர் ன்னா அவங்க பாஷையில் வேற அர்த்தம்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ