தி.மு.க., கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்போம்
மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண, டில்லியில் இலங்கை பிரதமரை சந்தித்து பேசினேன். கச்சத்தீவை மையமாக வைத்து புதிய நிறுவனம் உருவாக்கவும் அவரிடம் வலியுறுத்தினேன். ஜி.எஸ்.டி., குறைப்புக்கு அனைத்து மாநில நிதி அமைச்சர்களையும் மத்திய அரசு அழைத்து பேசியது போல், கல்வித்துறையிலும் அழைத்து பேசியிருக்கலாம். தி.மு.க.,வுடன் நாங்கள் கொள்கை கூட்டணி வைத்துள்ளோம். இதில் மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை. வரும் சட்டசபை தேர்தலில், எங்கள் கட்சிக்கு திருச்சி, வேலுார், நெல்லை, கடலுார், தஞ்சாவூர் ஆகிய 5 தொகுதிகளை கேட்போம். நாங்கள் கேட்கும் இடத்தில் உள்ளோம். தி.மு.க., கொடுக்கும் இடத்தில் உள்ளது. நாங்கள் கேட்காததையும் தி.மு.க., கொடுக்கும். பா.ஜ., கூட்டணியில் த.வெ.க., இணைந்தால் மும்முனை போட்டி ஏற்படும். நடிகர்களுக்கு கூடும் கூட்டத்தை வைத்து தேர்தல் முடிவை கூற முடியாது. - காதர்மொய்தீன், தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்