உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிற கட்சிகளின் உள் விவகாரங்களில் தலையிடமாட்டோம்: நயினார் நாகேந்திரன் உறுதி

பிற கட்சிகளின் உள் விவகாரங்களில் தலையிடமாட்டோம்: நயினார் நாகேந்திரன் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: 'பாஜ நிச்சயமாக பிற கட்சிகளின் உள் விவகாரங்களில் தலையிடாது' என, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்சை அவரது வீட்டில் சந்தித்து பேசிய பிறகு நிருபர்களிடம் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: மரியாதை நிமித்தமாக இபிஎஸ்யை சந்தித்தேன். இதில் அரசியல் பேசவில்லை. பாஜ நிச்சயமாக எந்த கட்சியின் உட்கட்சி பிரச்னையிலும் தலையிடாது. அரசியலில் நிரந்தரமான தலைவர்கள் கிடையாது. தேர்தலுக்கு இன்னும் 6, 7 மாதங்கள் இருக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vtwh4mp6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மக்கள் எழுச்சி

திமுக 4 ஆண்டுகளாக ஆட்சியில் மக்களுக்காக எந்த வேலையும் செய்யவில்லை. தேர்தலில் மக்கள் மிக பெரிய மாற்றத்தை உருவாக்குவார்கள் என எங்களுக்கு தெரிகிறது. ராசிபுரத்தில் இபிஎஸ் பேசிய கூட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மக்கள் எழுச்சி எங்கள் கூட்டணி பக்கம் தான் இருக்கிறது. தம்பி விஜய் வந்து இப்பொழுது தான் கட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள்.

ஜோசியம்

கூட்டம் வருவதை வைத்து, திமுகவுக்கு, எங்களுக்கும் தான் போட்டி என்று எல்லாம் சொல்லக்கூடாது. அதற்கு தேர்தல் வர வேண்டும். ஒழுங்கான வேட்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும். அதற்கு எல்லாம் பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். மக்கள் ஓட்டு போட வேண்டும். அதன் பிறகு தான் சொல்ல முடியும். ஜோசியம் எல்லாம் சொல்ல முடியாது. வேட்பாளராக வேனில் செல்லும் மக்களின் சைகைகளை பார்த்தாலே எது ஓட்டாக மாறும் என்று நமக்கு தெரியும்.

பெரிய கட்சி

முதல்வராக பணியாற்றி உள்ள இபிஎஸ்க்கு எல்லா விஷயங்களும் தெரியும். திடீர்னு வந்து திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என சொன்னால் எப்படி? அது எப்படி பொறுத்தமாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. எங்களுடன் யாரையும் ஓப்பிட்டு பேசக்கூடாது. நாங்கள் 300க்கும் மேற்பட்ட எம்பிக்களை வைத்து இருக்கிறோம். 1500 எம்எல்ஏக்கள் வைத்து இருக்கிறோம். நாங்கள் மிகப்பெரிய கட்சி. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Venugopal S
செப் 21, 2025 20:36

எங்கள் கட்சி கோஷ்டிப் பூசல்களையே எங்களுக்கு சமாளிக்க நேரமில்லை, இதில் மற்ற கட்சிகளின் உட்கட்சி விவகாரத்தில் எங்கிருந்து தலையிடுவது?


Gokul Krishnan
செப் 21, 2025 18:12

அமிதா ஷா டெல்லியில் செய்யும் பஞ்சாயத்துக்கு என்ன பெயர்


Ganesun Iyer
செப் 21, 2025 15:59

அதே நேரம் பிஜேபிய வளரவிடாம பாத்துக்குவோம். இதுதான் எங்களுக்கு தமிழ்நாட்டில அசைன்மென்ட்..


Raja k
செப் 21, 2025 15:54

,தினமும் உங்க செய்தி வர வேண்டும் என்பதற்காக எந்த பொய்யாவது சொல்லி உளறி வைப்பதுதானே உங்க வேலை தற்போது,


அஜய் இந்தியன் தெற்கு தமிழகம்
செப் 21, 2025 14:39

நைனா நீ எப்போது பதிவு விளக்குகிறாய். நேரம் தேதி சொல்லவும். அப்போது தான் தமிழக பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.


Vasan
செப் 21, 2025 14:03

இவர்கள் ஏன் நேரத்தையும், எரிபொருளையும் விரயம் செய்து, பாதுகாப்பை பணயம் வைத்து, படை சூழ பயணம் செய்து, மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார்கள்? தொலைபேசி, அல்லது அலைபேசியில் உரையாடலாமே . சாலைப் பயணம் ஆபத்தானது. கனரக வாகனங்கள் கார் மேல் மோதி விபத்துக்கு ஆளாவதை அடிக்கடி செய்தி தாள்களில் படிக்கிறோம்.


T.sthivinayagam
செப் 21, 2025 13:58

அண்ணாமலையை நம்பிய ஒபிஸ்க்கு கிடைத்தது என்னவோ பலாப்பழம் தான் என்று மக்கள் கூறுகின்றனர்.


pakalavan
செப் 21, 2025 13:50

என்ன பெரிய கட்சி ? தமிழ்நாட்ல பிஜேபி என்ற கட்சியே இல்லையே


V K
செப் 21, 2025 13:45

ஆமாம் பா ஜா க அக்கப்போர் பார்க்க முடியவில்லை இதில் எங்கே அடுத்த கட்சி யை போய் பார்க்கறது


திகழ் ஓவியன்
செப் 21, 2025 13:40

அதிமுக பாஜக கூட்டணியின் அபார வெற்றி தமிழக ம(த)மாறா மக்களால் ஏற்கனவே உறுதியாகி விட்டது...


வாய்மையே வெல்லும்
செப் 21, 2025 15:05

மதரஸா கல்வி பயிலகத்தில் இருந்து படிப்பைவிட்டுவிட்டு பாதியிலேயே ஓடிவிட்ட மாணவனின் கருத்து இப்படி அரைகுறையாக தான் இருக்கும். உங்கள் தரம் அவ்வண்ணமே ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை